தாக்கப்படும் தமிழக மீனவர்கள் – வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு: திருமாவளவன்

Published On:

| By Minnambalam

 
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என்று திருமாவளவன் குற்றச்சாட்டியுளார்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 

ADVERTISEMENT

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இலங்கை கடற்படையால் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. கைது செய்யப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்கவேண்டும். தமிழக முதலமைச்சரும் அழுத்தம் தரவேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ஏற்கனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் மேலும் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும் அவர்களின் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதையும்  சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களது விசைப்படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

-ராஜ்

போலி பத்திரப்பதிவைத் தடுக்க புது சட்டம்: அமைச்சர் மூர்த்தி

கிச்சன் கீர்த்தனா: ஸ்வீட்லெஸ் போளி!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share