வைஃபை ஆன் செய்ததும், “நேற்று இருந்த நிலைமை மாறும், நாளை நமதே வெற்றி சேரும்” என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. என்ட்ரியிலேயே ஏதோ ட்விஸ்ட் மாதிரி தெரியுதுங்களே..
அப்படியா.. சில சம்பவங்களை சொல்றேன்.. ட்விஸ்ட்டா இல்லையான்னு தெரிஞ்சுக்கலாம்..

சொல்லுங்க ப்ரோ.. 2 நாட்களுக்கு முன்னாடி மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜியின் (Senthil Balaji) தம்பி அசோக் குமாரை திடீர்னு கரூர் போலீசார் வலை வீசி தேடினாங்க.. சென்னை எம்.ஆர்.சி நகரில் இருக்கிற அசோக்குமார் வீட்டுக்குள்ள நுழைஞ்சும் தேடுனாங்க..

திடீர்னு போலீஸ், அசோக்குமாரை தேடுனது ரொம்பவே பரபரப்பாகிடுச்சு..
முதல்ல என்ன கேஸ்ல அசோக் குமாரை போலீஸ் தேடுதுன்னே தெரியலை.. அப்புறம்தான் 2023-ல் செந்தில் பாலாஜி வீட்டில் ஐடி ரெய்டு நடந்தப்ப ஐடி ஆபீசர்ஸ் மீது தாக்குதல் நடந்து பரபரப்பாச்சு இல்லையா? அந்த வழக்கில்தான் அசோக் குமாரை இப்ப “திடீர்னு” போலீஸ் தேடுதுன்னும் தகவல் வந்துச்சு..

சட்டசபையில நேத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் செயல்பாடுகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ரொம்பவே மகிழ்ச்சி அடைய வைச்சிருக்கு.. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதமாக இருந்தாலும் எதிர்க்கட்சியினரும் கருத்துகளை சொல்ல, பதில் சொல்ல அனுமதிச்சார் சபாநாயகர்.. குறிப்பா அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவினர் பத்தி பேசுனப்ப, “ஆதாரம் இல்லாம பேசாதீங்க.. ”எந்த ஊர்? எந்த வழக்கு, எந்த போலீஸ் ஸ்டேஷன்”னு சொல்லிட்டு பேசுங்க”ன்னு கையை நீட்டி வார்னிங் கொடுத்தார்.. ஆதவ் அர்ஜூனாவும் இன்னைக்கு ‘ஆதாரங்களை’ கொடுக்கிறேன்னு சொல்ற அளவுக்கு சீரியசாக இருந்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.
அதே மாதிரி சென்னை மேயர் பிரியாவுக்கும் டிவிகே எம்.எல்.ஏ. பல்லவிக்கும் ‘கட்டிடம்’ திறக்கிறது மோதல் ஏற்பட்டுச்சு இல்லையா? அந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கனும்னு பல்லவி எம்.எல்.ஏ. கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்கலைன்னு சொன்ன சபாநாயகர், “அனைத்து அரசு நிகழ்வுகளிலும் மரபு நெறிமுறைப்படி அந்த தொகுதியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் மரபு நெறிமுறைகளை கடைப்பிடிக்க நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த அலுவலர்களுக்கும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு மதிப்புக்குரிய அரசு தலைமைச் செயலாளர் அவர்களுக்கு உத்தரவிடுகிறேன்”ன்னு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சொல்லி இருந்தார்..
இன்னொன்று, அமைச்சர் வன்னி அரசு, மத்திய அரசுக்கு எதிராக விமர்சனம் வைத்த போதும் சபாநாயகர் குறுக்கிட்டார்..
இப்படி எல்லாம் சபாநாயகர் நடுநிலையாக இருக்கிறதுதான் எதிர்க்கட்சிகளின் ‘ஹேப்பிக்கு’ காரணம்…

சபாநாயகர் பத்தி சிஎம் விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட பேசும் போது ஒரு விஷயத்தை சொல்றாங்க.. அதாவது, “எம்ஜிஆர் காலத்தில் சபாநாயகராக இருந்த க.ராஜாராம், ரொம்ப நடுநிலையாக நடந்துக்குவாரு.. எதிர்க்கட்சிகளுக்கும் உரிய சுதந்திரம் கொடுத்திருந்தாரு.. அவரைத்தான் நான் பாலோ அப் செய்யனும்னு விரும்புகிறேன்.. அதாவது க.ராஜாராம் மாதிரி நடுநிலையாக இருக்க விரும்பறேன்”ன்னு சிஎம் விஜய்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சொல்லி இருந்தார்.. சிஎம் விஜய்யும், “சரிங்க அண்ணே”ன்னு ஓகே சொல்லி இருந்தார்”னும் ஷேர் செஞ்சாங்க..
சரிங்க ப்ரோ.. செந்தில் பாலாஜி தம்பி அசோக்கை போலீஸ் தேடுறதுக்கும் சட்டசபையில சபாநாயகரோட செயல்பாட்டை பத்தி நாம பேசுறதுக்கும் என்னங்க தொடர்பிருக்கு?
சொல்றேன் ப்ரோ… அதாவது இன்னைக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஆக்ஷன்ஸை பாராட்டுற இதே திமுக தரப்பு, போன வாரம் ”சபாநாயகரை” முன்வைச்சு ‘சம்பவங்களை’ செஞ்சது.. அதுதான் அசோக் குமாரை போலீஸ் தேடுறதுக்கும் காரணம்னு சொல்றாங்க..
இதை பத்தி செந்தில் பாலாஜிக்கு மிக நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “தற்போதைய தவெக ஆட்சி தொடர்ந்து நீடிக்கிறதால திமுகவுக்கு எதிர்காலத்துல ரொம்ப சிக்கலாகிடும்னு எல்லாருமே நினைக்கிறாங்க..
போன மே 13-ந் தேதிதான் விஜய் கவர்மெண்ட் மேல நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துச்சு.. அதனால அடுத்த 6 மாசத்துக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது..
ஆனா, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இணையா விஜய் அரசுக்கு நெருக்கடி தர்ற மாதிரி சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும்.. அந்த தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டால் அதை வைச்சு தவெக ஆட்சியை கவிழ்க்க முடியும்னு ஒரு ஸ்கெட்ச் போட்டாங்க..

இந்த ஸ்கெட்ச்சோடு களமிறங்கினது செந்தில் பாலாஜிதான்.. இதை பத்தி உதயநிதி ஸ்டாலின்கிட்டேயும் டிஸ்கஷன் செஞ்சிருக்காரு செந்தில் பாலாஜி.
இதுக்கு அப்புறம்தான் செந்தில் பாலாஜியும் அவர் தம்பி அசோக்கும் ‘சம்பவத்துல’ இறங்கிட்டாங்க..
இதுக்காக, ஒரு பக்கம் விஜய் கவர்மெண்ட்டை ஆதரிக்கிற கட்சிகளோட எம்.எல்.ஏக்கள்கிட்ட பேசி ‘ரெடி’ செஞ்சுகிட்டு இருந்தாங்க..
இன்னொரு பக்கம், தவெகவில பலவீனமாக இருக்கிற 4 எம்.எல்.ஏ.க்களையும் வளைச்சுட்டாங்க.. அதுல 2 எம்.எல்.ஏ.க்களுக்கு “அட்வான்ஸ்” கூட சேர்ந்துருச்சுன்னு தகவல் இருக்கு..

இப்படி சபாநாயகரை முன்வைச்சு விஜய் ஆட்சிக்கு எதிராக நடக்குற அத்தனை மூவ்மெண்ட்ஸும் உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க்-க்கு போக அவரும் ஒரு டீம் பார்ம் பண்ணி, கண்காணிக்க வேண்டியவங்களை கண்காணிச்சு சிஎம் விஜய்க்கு டீட்டெய்லா ரிப்போர்ட் அனுப்பிட்டாரு..

இந்த ரிப்போர்ட்டைப் பார்த்து ஷாக் ஆன சிஎம் விஜய்.. இதை ஆப் செய்யனுமேன்னுதான் ஆக்ஷனுக்கு ஓகே சொன்னாரு.. கரூர் போலீசும் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை வலை வீசி தேட தொடங்கிச்சுங்க.. சபாநாயகருக்கு எதிரான ஆபரேஷனும் நின்னு போச்சு”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
