தமது 52-வது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தமிழக முதல்வர் விஜய் (CM Vijay) நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு இன்று ஜூன் 22-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின்52-வது பிறந்தநாளை முன்னிட்டு, நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் வழியாகவும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தவர்களுக்கு, முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்துக் கொண்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தோர் விவரமும் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
முதல்வர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்கள்:
- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
- பிரதமர் நரேந்திர மோடி
- தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர்
- புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி
- தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்
எக்ஸ் (X) வலைதளம் வழியாக:
- குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
- மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
- ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
- ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டில்
- ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி
- ஒன்றிய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்
- ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார்
- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே
- சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங்
- ஒன்றிய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
- ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன்
- ஒன்றிய இணை அமைச்சர் ஜெயந்த் சிங்
- ஒடிசா மாநில துணை முதலமைச்சர் பிரவதி பரிதா
- ஆந்திரப் பிரதேச மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண்
- தெலங்கானா மாநில அமைச்சர் பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி
- தெலங்கானா மாநில அமைச்சர் பொன்னம் பிரபாகர்
- திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி
- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்
- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர்
- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை
- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ
- பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன்
- பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்
- மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன்
- நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
- நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி
- நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ
- நாடாளுமன்ற உறுப்பினர் சையது நசீர் உசேன்
- நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்
- நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்
- நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்
- நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில்
- ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி
- கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா
- புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வி. நாராயணசாமி
- சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி
- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன்
- முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
- ஹரியானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராவ் நரேந்தர் சிங்
- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆந்திரப் பிரதேச மாநிலத் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா
- பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திரப் பிரதேச மாநிலத் துணைத் தலைவர் விஷ்ணு வர்தன் ரெட்டி
- முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்
- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேசிய செயலாளர் (பொறுப்பு) நிவேதித் ஆல்வா
- பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வானதி சீனிவாசன்
- பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவர் குஷ்பு சுந்தர்
- ஆந்திரப் பிரதேச மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா செல்வம்மணி
- இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டி.ஆர். பாரிவேந்தர்
- தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன்
- புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி
- We the Leaders இயக்கத்தின் நிறுவனர் கே. அண்ணாமலை
- புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
- புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம்
- அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா
- கவிப்பேரரசு வைரமுத்து
- திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார்
- திரைப்பட நடிகர் மம்முட்டி
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்
நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தவர்கள்:
- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்
- சட்டப்பேரவை துணைத் தலைவர் மு. ரவிசங்கர்
