முதல்வர் விஜய் பிறந்தநாள்: பேரவையில் சபாநாயகர் வாழ்த்து

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 22) முதல்வர் விஜய்க்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல் பிறந்த நாளை கொண்டாடும் ஜோசப் விஜய்க்கு, சட்டசபையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது:-

ADVERTISEMENT

“முதலமைச்சர் விஜய் தனது 52 வது வயதை பூர்த்தி செய்து 53-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தூய்மையான ஆட்சிக்கு சொந்தக்காரராக விளங்கும் முதலமைச்சர் விஜய், பல்லாண்டு வாழ்ந்து பல சாதனைகளை புரிய வேண்டும். தலைமைக்கு அழகு முதலமைச்சர் விஜய்தான் என்று மக்கள் நினைக்கிறார்கள். அரசியல் களத்தில் எதிர்கொண்ட சோதனைகளை மக்கள் பலத்தால் வென்று காட்டியவர். தமிழக அரசியலில் புதிய சகாப்தம் படைத்து ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் முதலமைச்சர் விஜய், நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share