சட்டப்பேரவைக்கு வந்த சபரீசன்… முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து!

Published On:

| By Kavi

முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் இன்று தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இந்த நிலையில் இன்று ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

ADVERTISEMENT

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.

இன்று பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். இந்த சூழலில் சட்டப்பேரவை நிகழ்வை நேரடியாக பார்ப்பதற்கு சபரீசன் வருகை தந்தார்.

ADVERTISEMENT

அப்போது அவரிடம், இப்போதைய அரசியல் சூழலில் சட்டப்பேரவைக்கு வருகை தந்திருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு… ‘ சாரி’ என கூறி பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

தொடர்ந்து இன்று முதல்வருக்கு பிறந்தநாள் என்று செய்தியாளர்கள் கூற, ‘அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று பதிலளித்துவிட்டு உள்ளே சென்றார்.

ADVERTISEMENT

சட்டப்பேரவை நிகழ்வை நேரடியாக பார்த்துவிட்டு, வெளியே வந்த அவரிடம் மீண்டும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share