முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை போல ’சைகை’ செய்த முதல்வர் விஜய்

Published On:

| By Mathi

TN Assembly Vijay

தமிழக சட்டசபையில் இன்று ஜூன் 23-ந் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்வர் விஜய் தற்போது பேசி வருகிறார்.

முதல்வர் விஜய் பேச்சு நேரலையாக..

  • சபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • திமுக தலைவர் ஸ்டாலினைப் போல சைகை செய்து காட்டினார் முதல்வர் விஜய்.
  • Evils Evils என்று Devils பேசக் கூடாது.. முதல்வர் விஜய்
  • திமுக ஆட்சியில் கலைஞர் படத் திறப்பு விழாவில் தேசிய கீதத்துக்கு அடுத்ததாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்ட நிகழ்வு நடந்தது- முதல்வர் விஜய்
  • ”உங்க அப்பாவை இங்கே காணோமே” என முதல்வர் விஜய் கிண்டல்.. தாம் குட்டி ஸ்டோரியை சொன்னதாக முதல்வர் விஜய் விளக்கம்
  • சட்டசபையிலும் குட்டி ஸ்டோரி சொன்னார் முதல்வர் விஜய்.
  • ஷோபா மாடல் ஆட்சி என்ன என்பதே எனக்கு முதலில் தெரியவில்லை.,
  • எம்ஜிஆர் காலம் முதல் ஒரே ‘டெக்னிக்கை’யே பின்பற்றுகிறார்கள்- முதல்வர் விஜய்
  • ஊழலில் ஊறிப் போனவர்கள் கூட்டணி ஆட்சியை விரும்பமாட்டார்கள்- முதல்வர் விஜய்
  • எத்தனை பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தீங்க? நாங்கள் 4 பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தோம்- முதல்வர் விஜய்
  • பட்டியல் இனத்தவருக்கு 8 அமைச்சர் பதவிகள் கொடுத்துள்ளோம்
  • சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
  • மக்கள் பணத்தை தொட்டவர்கள நாங்கள் விடமாட்டோம்
  • முதல்வர் பேசியதில் ஆதாரங்கள் இல்லை எனில் சபை குறிப்பில் இருந்து நீக்கப்படும்- சபாநாயகர்
  • முதல்வர் தவறான தகவலை சொல்கிறார்; எந்த பார்ட்டி பண்ட் என பேச தைரியம் இருக்கிறதா? உதயநிதி ஸ்டாலின்
  • எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் மைக் ஆஃப் செய்யப்பட்டது
  • சபையில் முந்தைய ஆட்சியில் நடைபெற்றதை பேசி அவையின் மாண்பை குலைக்க வேண்டாம்- அவை முன்னவர் செங்கோட்டையனுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
  • சட்டத்துக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் பேசினார்.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
  • சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும்- அமைச்சர் ராஜ்மோகன்
  • திமுக எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு சபாநாயகர் வேண்டுகோள்
  • சபையில் அமளி ஏற்பட்ட நிலையில் அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள்
  • சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒரே நேரத்தில் முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது.
  • டாஸ்மாக்கில் ‘பார்ட்டி பண்ட்’ வாங்கியதாக முதல்வர் விஜய் குற்றச்சாட்டு- திமுக கடும் எதிர்ப்பு
  • ஊரடிச்சு உலையில் போட்டு ஊழல் செய்வதில் இருந்து தப்பிப்பதுதான் நிர்வாக திறனா?
  • சட்டம் ஒழுங்கு குறித்த யோசனைகளை தெரிவித்தால் காது கொடுத்து கேட்போம்.
  • போதைப் பொருள் கடத்தலை தொடக்கத்திலேயே ஏன் தடுக்கவில்லை?
  • 9,10 மாதங்களாக போன ஆட்சியில் சட்டம் ஒழுங்கு டிஜிபியே நியமிக்கவில்லையே ஏன்?
  • பல ஆண்டுகளாக இருக்கக் கூடிய பிரச்சனை; இதை எதிர்க்கட்சிகள் கேட்பது அக்கறையால் அல்ல.. அவதூறு அரசியல்.
  • நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய விவரங்களை சட்டசபையில் பட்டியலிட்டார் முதல்வர் விஜய்
  • மாநில உரிமைகளை விட்டுத் தரமாட்டோம்; யாருடைய பி டீமும் நாங்கள் இல்லை.
  • மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தொடங்க வலியுறுத்தி உள்ளோம்.
  • சிறுபான்மை சமூகங்களுக்கு ஆதரவு இயக்கங்களுக்கு சந்தேகம் வேண்டாம்
  • ஒன்றிய அரசின் கட்சியுடன் கொள்கை அளவில் நேர் எதிராக நிற்பவர்கள் நாங்கள்; அதே நேரத்தில் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்காமல் தமிழக நலனுக்காக நிற்போம்.
  • எதிர்க்கட்சிகளின் தூண்டுதல்களால் விவசாயிகள் போராட்டம்
  • மின்மிகை மாநிலமாக இருந்தாலும் நிர்வாக குளறுபடிகளால் மின்வெட்டு; சிலரது நடவடிக்கையால் மின்வெட்டு நிலைமை உருவானது
  • ஓசி பஸ், 1,000 ரூபாய் கேஸ் என எங்களுக்கு பேச தெரியாது.
  • அரசு பணத்தை தனிப்பட்ட கஜானாவுக்கு மாற்ற தெரியாதுதான்..
  • கோவில் பணத்தை கொள்ளையடிக்க தெரியாது; தங்கத்தை உருக்கி கொள்ளையடிக்க தெரியாது.
  • டெண்டர் ரேட்டை உயர்த்தி ஊழல் செய்ய தெரியாது
  • எங்களுக்கு ஒன்றும் தெரியாதுதான்.. ஆமாம்.. மக்கள் பணி செய்யத் தெரிந்த அளவுக்கு மக்கள் பணத்தை சுருட்ட தெரியாது.
  • லஞ்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை
  • டாஸ்மாக் மதுபான கடைகள், குவாரிகள் சீல், சிங்க பெண் பாதுகாப்பு படை உள்ளிட்டவைகளை பட்டியலிட்டார் முதல்வர் விஜய்
  • தவெக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு பேசி வருகிறார் முதல்வர் விஜய்
  • தவெகவின் அரசியல் வெளிப்படையாக தொடங்கிவிட்டது
  • யார் யாருடன் சேரமாட்டார்கள் என நினைத்தோம் அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தவெக ஆட்சிக்கு தேதி குறிக்கிறார்கள்.
  • மக்களே! கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.. ஏராளமான ஓட்டைகளை அடைச்சுட்டு நல்லது செஞ்சுகிட்டே வருகிறோம்.
  • தேர்தலில் ஜாதி, மதம், பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாசாரம் ஒழிக்கப்பட்டது.
  • ஒரே குடும்பம்தான் முக்கியம் எனபவர்கள் நாம் இல்லை; ஒவ்வொரு குடும்பமும் நமக்கு முக்கியம்
  • கரூரில் 41 பேர் பலியான சம்பவத்துக்கு எங்கள் மீதே பழியை போட்டாங்க.. அரசியல்னா இவ்வளவு கொடூரமா இருக்க கூடாது.
  • மக்கள் சந்திப்புக்கு யாருக்குமே இல்லாத வகையில் தடைகள் விதிக்கப்பட்டன
  • தவெக ஆளும் கட்சியாக வந்தது சாதாரணமானது இல்லை; எவ்வளவோ வலியும் வேதனைகள்.. மக்கள் சந்திப்புக்கே இடையூறுகள்.
  • 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக வந்தோம்; 35 சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம்.
  • நம்மை குடும்பத்தில் ஒருவராக இயல்பாக ஏற்றுக் கொண்டனர்
  • ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போன பிறகும் கட்சியே ஆரம்பிச்சோம்
  • தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை
  • சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நிகழ்வுகளை பட்டியலிட்டார் முதல்வர் விஜய்
  • ஒன்றிணைந்து செயல்பட்டால் மாநிலம் முன்னேறும்
  • கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் மக்கள் பணிக்காக இணைந்து செயல்படுகிறோம்.
🔴 LIVE: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நேரலை | TN Assembly LIVE | CM Vijay Speech | Udhayanidhi
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share