சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் இன்று (நவ. 1) “தமிழ்நாடு நாள்” விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்:
முதலமைச்சரின் உத்தரவின்படி, இனி வாரம் ஒரு நாள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மரபு ஆடை தினம் நடைமுறைக்கு வரவுள்ளது.
முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தலைமைச் செயலகத்தில் தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்டு, ஏற்கனவே இயங்கி வரும் சங்கங்களை ஒருங்கிணைத்து, அதன் தலைவராக முதலமைச்சரே செயல்படுவார்.
உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மீண்டும் உலகத் தமிழ் மாநாடு இந்தத் தமிழ் மண்ணில் தொடங்கப்பட்டு உலகெங்கும் நடத்தப்படும்.










