வைஃபை ஆன் செய்ததும், “கடல் நீறு கொறையாது போங்கடா கரையோரம் உறவாட வாங்கடா”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. சிஎம் விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்துல வர்ற பாட்டை பாடுறீங்க? அதுவும் கடல் சம்பந்தமா.. அப்ப பட்டினப்பாக்கம் தலைமை செயலகம் மேட்டரா ப்ரோ?
ப்ரோ.. இது சிஎம் விஜய் கட்சி சம்பந்தப்பட்டதுதான் ப்ரோ.. ஆனால் தமிழ்நாட்டுல பெரும் பூகத்தையே கிளப்பியிருக்கிற.. போதைப் பொருள் கடத்தல் கேஸில கைதான தவெக மாஜி நிர்வாகி நாகை பூபாலன் பத்தி..

இந்த பூபாலன், தவெக மாவட்டச் செயற்குழு உறுப்பினரா இருந்தவர். போன அக்டோபர் 16, 17-ந் தேதிகளில மத்திய நிதி அமைச்சகத்தின் கண்ட்ரோலில் இருக்கிற வருவாய் புலனாய்வு இயக்குநரகமான டிஆர்ஐ நடத்திய ஆபரேஷன்ல பூபாலன் உள்ளிட்ட 4 பேரை கைது செஞ்சாங்க.. இந்த விவரத்தையும் டிஆர்ஐதான் வெளியே சொன்னது.

டிஆர்ஐ பிரஸ் ரிலீஸ்ல, ”போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர கிராமத்திலிருந்து, தடைசெய்யப்பட்ட செயற்கை போதைப்பொருளான கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைனை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த எடை 137 கிலோ கிராம் ஆகும்.
உளவு தகவலின் அடிப்படையில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், 2026 அக்டோபர் 16, 17 தேதிகளில் தீவிர கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் மூலம், போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு கடலோர போதைப்பொருள் கடத்தல் கும்பலை அவர்கள் வெற்றிகரமாகக் கண்டுபிடித்தனர். இந்த போதைப் பொருள், கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்தது. கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 5 கிலோ எடை கொண்ட 27 வெள்ளித் தகடு பொட்டலங்கள் அடங்கிய ஆறு டஃபிள் பைகள் மீட்கப்பட்டன . அந்தப் பொட்டலங்களில், மெத்தம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் ஒரு வெள்ளை நிறப் படிகப் பொருள் இருந்தது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நான்கு நபர்கள், கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்”ன்னு சொல்லி இருந்தது..
இந்த கேஸில சிக்குனவர்தான் நாகை பூபாலன்.. அதுக்கு அப்புறம்தான் இந்த விவகாரம் தமிழக அரசியலிலும் பூதாகரமாக வெடிச்சது.. ஆளும் விஜய் அரசுக்கு இந்த பிரச்சனை இன்னைக்கு வரைக்கும் சிக்கலாதான் இருக்குது..
ப்ரோ.. எனக்கு ஒரு சந்தேகம்.. தவெக மாஜி பூபாலன் மாதிரிக ஆளுக பதுங்கி தொழில் செய்யுற அளவுக்கா தமிழ்நாடு போதைப் பொருள் கடத்தல் பூமி ஆகிடுச்சா?
ப்ரோ.. இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் டாப்பில் இருக்கிறது குஜராத், பஞ்சாப்தான்.. இந்த லிஸ்ட்ல 3-வது இடம் நம்ம தமிழ்நாட்டுக்கு.
இதை பத்தி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் விசாரிப்ப, “குஜராத், பஞ்சாப்பில சிக்குற போதைப் பொருள் விவகாரங்களில் தமிழ்நாட்டு லிங்க் ஏதாவது ஒன்னு இருக்கதான் செய்யுது..

பஞ்சாப்பை பொறுத்தவரைக்கும் பாகிஸ்தானுக்கு லேண்ட் லைன் பார்டர்.. அதனால கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு தினுசு தினுசா கடத்தல் நடக்குது.. டிரோன்கள் மூலமாக கூட போதைப் பொருட்களை பாகிஸ்தான் சைடுல இருந்து நம்ம சைடுக்கு அனுப்பிவிடுவாங்க..
ஆனாலுல் பஞ்சாப்பில போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கும் சரி.. போலீஸுக்கும் சரி.. இன்பார்மர்ஸ்.. அதாவது சோர்ஸ் நல்ல வலுவாக இருக்கிறாங்க.. ஆனால் இப்ப சமீபமா இந்த இன்பார்மர்ஸ் நிலைமை ரொம்ப மோசமா போயிருச்சு..

போன செப்டம்பர் மாதம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்ஜார் சிங் அப்படிங்கிறவர் மர்மமான முறையில இறந்துட்டாரு.. அவர் போதைப் பொருள் விற்பனையை ரொம்ப கடுமையாக எதிர்த்து போலீசுடன் இணைந்து செயல்பட்டவர்..

இந்த அக்டோபர் மாசத்துல 13-ந் தேதி பர்வீந்தர் சிங் ஜோட்டா அப்படிங்கிற இன்ஃபார்மரை சுட்டுக் கொன்னுட்டாங்க.. மருந்து கடைகளில் எப்படி எல்லாம் போதைப் பொருள் விற்கிறாங்கன்னு தகவல் கொடுத்தவர் இவருதான்.. அதனால அவரை கொன்னுட்டாங்க..
பஞ்சாப் குர்தாஸ்பூர் மாவட்டத்துல பிக்ரம்ஜித் சிங் அப்படிங்கிறவர் போதைப் பொருள் விற்பனையை கடுமையா எதிர்த்தவர்.. போலீஸுக்கும் தகவல் கொடுத்தவர் அவரை போன 16-ந் தேதி சுட்டுக் கொன்னுட்டாங்க..

இதே மாதிரி ASI குருநாம் சிங், ஹோம் கார்டு அசோக் குமார்.. இவங்க டூட்டியில இருந்தப்ப சுட்டுக் கொல்லப்பட்டாங்க.. கேட்டா தீவிரவாதிகள் சதின்னு சொல்லிட்டாங்க..
இப்படி போதைப் பொருள் கும்பல், இன்ஃபார்மர்னு தெரிஞ்சவங்களை வெறிகொண்டு தீவிரமா அழிச்சுடனும்னு நினைக்குது.. இதனால இன்ஃபார்மர்ஸ் பலரும் ரொம்ப பயந்து போயிருக்காங்க..




இதனால மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே இப்ப களத்துல இறங்கிட்டாரு.. போன 20-ந் தேதி பஞ்சாப்-க்கு போன அமித்ஷா, பர்வீந்தர் சிங் ஜோட்டா- பிக்ரம்ஜித் சிங்- குல்ஜார் சிங் வீடுகளுக்கு போய் அவங்க குடும்பத்தினரை சந்திச்சு ஆறுதல் சொன்னார்.. அந்த குடும்பத்துக்கு தேவையான வீடு, பணம் உட்பட அத்தனை வசதிகளையும் அரசு செஞ்சுதரும்னு உறுதி கொடுத்திருந்தார்..
அதாவது இன்ஃபார்மர்ஸுக்கு மத்திய அரசு ஆதரவாகதான் இருக்கும்; அவர்களை பாதுகாக்கும் அப்படிங்கிற நம்பிக்கையை இந்த விசிட் மூலமா அமித்ஷா கொடுத்திருந்தார்.
இதை ஏன் சொல்றோம்னா சார்.. போதைப் பொருள் கடத்தல் அப்படிங்கிறது மத்திய அரசுக்கு ரொம்ப சவாலான சீரியசான விஷயம்.. அதனால்தான் அமித்ஷாவே இறங்கி போய் சந்திக்கிறார்..

தமிழ்நாட்டுல அதிகமாக போதைப் பொருள் விவகாரம் வெளியே தெரியலை.. தமிழ்நாடு, கேரளா கடல்தான் போதைப் பொருள் கடத்தல் நெட்வொர்க்கில் ரொம்ப ரொம்ப முக்கியமானது.. இங்கிருந்துதான் மாலத்தீவுக்கும் இலங்கைக்கும் ஈஸியாக ‘சரக்கை’ மாத்திவிட முடியும். அரபிக் கடலும் வங்க கடலும் ரொம்ப முக்கியமான பகுதிகள்.. அதோட இந்திய பெருங்கடலும் இணைகிற இடம் அப்படிங்கிறதால இயல்பாகவே கடத்தலுக்கு முக்கியமான பகுதி.
தமிழ்நாட்டுக்குள்ள சரக்கை நீங்க கொண்டு போயாச்சுன்னா இலங்கைக்கு ஏதோ ஒரு இடத்துல இருந்து கொண்டு போக முடியும்.. இப்ப பூபாலன் சிக்கி இருக்கிற நாகை- வேதாரண்யம் கோடியக்கரையில இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு 25, 30 நிமிஷத்துல போயிடலாம்.. அதே மாதிரி ராமேஸ்வரம், அரிச்சல் முனை – இலங்கை மன்னார்.. இது எல்லாம் ரெகுலர் ரூட்ஸ்..

இப்ப 4 நாட்களுக்கு முன்னாடி அக்டோபர் 24-ந் தேதி இலங்கையின் மாத்தறை பகுதியில ஏகப்பட்ட சாக்கு மூட்டைகள் மிதந்துகிட்டு இருந்துச்சு.. இந்திய பெருங்கடலை ஒட்டிய பகுதிதான் மாத்தறை.. மொத்தமா 10 சாக்கு மூட்டைகள், 11 டிராவல் பேக்ஸை இலங்கை கடற்படை கைப்பற்றி என்னான்னு பார்த்தா 561 கிலோ போதைப் பொருள்.. இதுல 239 கிலோ மெத்தபெட்டமைன்; 321 கிலோ ஹெராயின். இதுவும் சுமார் ரூ1,500 கோடி மதிப்பிலான சரக்குதான்.
இதை பத்தி இலங்கை கடற்படை அதிகாரப்பூர்வமாக அறிவிச்சது.. அதாவது, “இலங்கை கடற்படையினர், இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களத்துடன் இணைந்து, மாத்தறை, தலல்ல, நாஒட்டுன்ன கடற்கரைப் பகுதியில் அக்டோபர் 24 காலை மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, போதைப்பொருள் அடங்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பத்து (10) பொதிகளும் பதினொரு (11) பயணப் பைகளும் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்தக் கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடையது எனச் சந்தேகிக்கப்படும் ஒரு (01) டிங்கி படகும் கைப்பற்றப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்வரும் காலங்களில் வழங்குவதற்கு இலங்கை கடற்படை எதிர்பார்க்கின்றது”-ன்னு சொல்லி இருந்தது. அதோட கைப்பற்றப்பட சாக்குமூட்டை படங்களையும் ரிலீஸ் செஞ்சிருந்தது இலங்கை கடற்படை.

இந்த சரக்குகள் தமிழ்நாட்டுல இருந்து இலங்கைக்கு கொண்டு போனதா? அல்லது இலங்கையில இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வர ஸ்கெட்ச் போட்டு அந்த ஆபரேஷன் மிஸ்ஸிங் ஆனதா? அல்லது சாக்கு மூட்டைகளை மிதக்கவிட்டு கடத்துறதும் ஒரு ஆபரேஷனா?ன்னு பல கோணங்களில் விசாரிச்சுகிட்டு இருக்காங்க… அந்த அளவுக்கு தமிழ்நாட்டுக்கும் போதைப் பொருள் லிங்க் இருக்கதான் செய்யுது”ன்னு சொல்றாங்க ப்ரோ.
சரிங்க ப்ரோ.. பூபாலனை எப்படி திடீர்னு அதுவும் மத்திய அரசு ஏஜென்சி கைது செஞ்சது? அவங்களுக்கு எப்படி இன்ஃபார்ம் கிடைச்சதாம்? அந்த நெட்வொர்க் பத்தியும் டீட்டெயிலா சொல்லிடுங்களேன்..
இப்பதான் பாயிண்ட்டா பேசுறீங்க ப்ரோ.. பூபாலன் எப்படி சிக்கினாருன்னு விசாரிக்கப் போனா ஈரான், நைஜீரியா வரைக்கும் போகுது இந்த கேஸ்..
இதை பத்தி டெல்லி சோர்ஸ்களிடம் நாம பேசுனப்ப, ”குஜராத் பயங்கரவாத தடுப்பு படையில இருக்கிற ஜேஎம் படேலுக்கு போன செப்டம்பர் 10-ந் தேதி ஒரு தகவல் கிடைக்குது.. அது என்னான்னா, “அகமதாபாத்தில் போதைப் பொருள் ப்ரோக்கர் ஒருத்தரை நைஜீரியன் ஒருத்தர் சந்திச்சு 500 கிலோ மெத்தபெட்டமைனுக்கு ஆர்டர் கொடுத்தார்.

இந்த மெத்தபெட்டமைனை,
- ஈரான் இருந்து படகு மூலமா இந்தியாவுக்கு கொண்டு வர்றது..
- அப்புறமா மும்பை, கொச்சி, லட்சத்தீவுக்கு இடையிலான கடலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு படகில் வர்ற நபர்கள்கிட்ட இந்த போதைப்பொருட்களை கொடுக்கிறது..
- தமிழ்நாட்டுக்குள்ள மொத்த சரக்கையும் கொண்டு வந்து சின்ன சின்னதா பேக் செஞ்சு இங்கிருந்து பல ரூட்களில் பஞ்சாப்-க்கு கொண்டு போகிறது..
- பஞ்சாப்பில இருக்கிற இன்னொரு நைஜீரியன் கேங்கிடம் இந்த மெத்தபெட்டமைன் சரக்கை கடைசியா ஒப்படைக்கனும்..
இதுதான் அவங்க போட்டிருந்த மொத்த ஸ்கெட்ச்.
இந்த இன்புட் கிடைச்ச உடனே குஜராத் ஏடிஎஸ் ஆபீசர்ஸ் டெல்லியில் இருக்கிற இந்தியக் கடலோரக் காவல்படை- கோஸ்ட் கார்ட் ஹெட் ஆபீஸுக்கு இன்பார்ம் பண்ணிட்டாங்க.. அவங்களும் போதைப் பொருள் தடுப்பு பிரிவான என்சிபிக்கு மெசேஜை ஷேர் செஞ்சாங்க..
குஜராத் ஏடிஎஸ் எஸ்பி சித்தார்த் தலைமையில் ஒரு டீம் கொச்சிக்கு புறப்பட்டு போச்சு.. அங்க கோஸ்ட் கார்ட் ஆபீசர்ஸுடன் டிஸ்கஷன் நடத்தி ஒரு ஜாயிண்ட் டீம் ஃபார்ம் பண்ணினாங்க.. இந்த ஜாயிண்ட் டீம் தொடர்ந்து கடலில் கண்காணிச்சுகிட்டே இருந்தது..
போன செப்டம்பர் 25-ந் தேதி லட்சத்தீவுக்கு பக்கத்துல சந்தேகத்துக்குரிய படகு ஒன்றை ஜாயிண்ட் டீம் தடுத்து நிறுத்துச்சு.. படகுல ஏறி ரெய்டு நடத்தின ஆபீசர்ஸ் ஷாக் ஆயிட்டாங்க.. அப்படியே அந்த படகை மும்பைக்கு இழுத்துட்டுப் போயிட்டாங்க..
அந்த படகில்தான் குஜராத்தில் இருந்த நைஜீரியன் ஆர்டர் கொடுத்திருந்த 526 கிலோ போதைப்பொருள் இருந்தது. இதுல 400 கிலோ மெத்தபெட்டமைன், 126 கிலோ ஹெராயின். இதோட இண்டர்நேஷனல் வேல்யூ மொத்தம் ரூ3,000 கோடி..
இந்த படகில இருந்த 5 பாகிஸ்தானியர்களை கைது செஞ்சு விசாரணை நடத்தப்பட்டுச்சு.. அவங்கதான் இந்த முழு ஆபரேசனும் எப்படி நடந்துச்சுன்னு விலாவாரியா சொன்னாங்க..

அதாவது
- ஈரான் நாட்டின் கொனாரக் துறைமுகத்தில் இருந்து ஆசாத் அப்படிங்கிற படகு புறப்பட்டுச்சு..
- ஈரான் – பாகிஸ்தான் பார்டரில் இருக்கிற குவாதர் துறைமுகம் பக்கத்துல நடுக்கடலில் ஆசாத் படகில் போதைப் பொருட்கள் ஏற்றப்பட்டுச்சு.
- அந்த படகில் 5 பாகிஸ்தானியர்களும் ஏறிகிட்டாங்க..
- இந்த படகு, தமிழ்நாட்டு படகை தேடி அரபிக் கடலுக்கு வந்தது..
- லட்சத்தீவுக்கு வடமேற்கே 160 கடல் மைல் தொலைவிலும், மும்பைக்குத் தென்மேற்கே 490 கடல் மைல் தொலைவிலும் தமிழ்நாட்டு படகுக்காக காத்திருந்தது.. அங்கதான் குஜராத் ஏடிஎஸ், கோஸ்ட் கார்டு, என்சிபின்னு ஜாயிண்ட் டீம் சுற்றி வளைச்சு மடக்கி பிடிச்சு மும்பைக்கு கொண்டு வந்துட்டாங்க சார்.

16 நாள் காத்திருந்து இந்த ஆபரேஷனை சக்சஸ் செஞ்சாங்க.. இதை பத்தி உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னோட சோசியல் மீடியா பேஜில், “போதைப்பொருட்களின் பிடியிலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் மத்திய உளவு அமைப்புகள் இணைந்து நடத்திய நடவடிக்கையில், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்தில் ஈரான் நாட்டுப் படகிலிருந்து 526 கிலோ மெத்தபெட்டமைன் மற்றும் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லட்சத்தீவுக்கு வடமேற்கே 160 கடல் மைல் தொலைவிலும், மும்பைக்குத் தென்மேற்கே 490 கடல் மைல் தொலைவிலும் இந்தப் படகு பிடிபட்டது. இந்த நடவடிக்கையில் 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் போதைப்பொருள் கடத்தலுக்குப் பின்னால் உள்ள பெரிய வலையமைப்பையும், போதைப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள இருந்த நபர்களையும் கண்டறிய தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பல்வேறு அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக்கும் ஒத்துழைப்புக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த இந்த 16 நாள் நடவடிக்கையில் ஈரான் நாட்டுப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது”ன்னு பெருமிதத்துடன் சொல்லி இருந்தார்.
அதுக்கு பிறகு குஜராத்துல ஆர்டர் கொடுத்த நைஜீரியன், அந்த நைஜீரியன் சரக்கு பத்தி சொன்ன தமிழ்நாட்டுல இருந்த நைஜீரியன்னு எல்லாத்தையும் தூக்கிட்டாங்க..
இவங்ககிட்ட விசாரணை நடத்துனப்பதான் தமிழ்நாட்டுல நாகப்பட்டினத்துல இருக்கிற சர்வதேச போதைப் பொருட்ள் நெட்வொர்க்கில் ஒரு அங்கமான, தவெக நிர்வாகி ‘மெத்’ பூபாலனைப் பத்தியும் சொல்றாங்க..
இதுக்கு பிறகுதான் டிஆர்ஐ- வருவாய் புலனாய்வுத் துறை உள்ளே இறங்கி பூபாலனையும் அவரோட கூட்டாளிகளையும் தூக்குறாங்க.. அவங்ககிட்ட இருந்தும் ரூ100 கோடி மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செஞ்சாங்க”ன்னு சொல்றாங்க ப்ரோ.
அதாவது இந்த கேஸில தமிழ்நாடு போலீஸ் எதுவுமே பண்ணல.. தமிழ்நாட்டு போலீஸுக்கும் இன்ஃபார்ம் கூட பண்னலை.. குஜராத் ஏடிஎஸ், கோஸ்ட்கார்டு, என்சிபி ஜாயிண்ட் டீம் சீக்ரெட்டாவே இந்த ஆபரேசனை நடத்தி முடிச்சுட்டாங்க..
இப்படியான சர்வதேச போதைப் பொருள் கும்பலின் தமிழ்நாடு லிங்க் புள்ளியான தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக்த்தின் முன்னாள் நிர்வாகி ’மெத்’ பூபாலன்கிட்ட தொடர்ந்து விசாரணை நடத்திகிட்டு இருக்காங்க ப்ரோ.. இந்த விசாரணையில இன்னும் என்ன என்ன தகவல் வருமோ? எந்தெந்த ‘தலைகள்’ சிக்குமோ? அப்படிங்கிறதுதான் பல ‘கட்சி’ தலைவர்களும் வெயிட்டிங்கில இருக்கிறாங்க ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டியபடியே ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.










