துரைமுருகன் இல்ல திருமண விழாவில் குவிந்த பிரபலங்கள்!

By Kavi

|

Published on 1 Nov 2026, 12:53 AM

முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேத்தியும், கதிர் ஆனந்த் எம்.பியின் மகளுமான செந்தாமரை – தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான திட்டக்குடி ரவி கண்ணன் – தீபா தம்பதியரின் மகன் தீபக் ரவி இணையரின் திருமண வரவேற்பு நேற்று மாலை (அக்டோபர் 31) சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆர்.கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.

இதில் திமுகவினர் மட்டுமின்றி பாமக, பாஜக என பிறக்கட்சியின் தலைவர்களும், திரைபிரபலங்களும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் முக்கிய விஐபிகள் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

திமுக மூத்த தலைவர் துரைமுருகனுடன் முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன்
தனது மனைவி சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ.வுடன் துரைமுருகன் இல்ல திருமண விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
திருமணத்தில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் சுந்தர் .சி, பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்புவுடன் பாமக கவுரவ தலைவர் ஜி.கே மணி கலந்துரையாடல்
தயாநிதி மாறன் எம்.பியுடன் ஜி.கே.மணி

அதேபோன்று, நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், தம்பி ராமையா, பிரபு, காமெடி நடிகர் வடிவேலு, நடிகைகள் மீனா, அம்பிகா உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel