மறுபடியும் நமக்கு வட்டி கடையிலிருந்து நோட்டீஸ் வரும் : அப்டேட் குமாரு

By Kavi

|

Published on 1 Nov 2026, 12:03 AM

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

பரமசிவம் ராமசாமி

ADVERTISEMENT

ஆன்மீகத்தில் ரெண்டே வகைதான்! !!

கடவுள் வேசம் போடுகிறவன் ஏமாத்துகிறான்..!!

ADVERTISEMENT

கடவுள் பக்தியுடையவன் ஏமாறுகிறான்…!!

balebalu

ADVERTISEMENT

பஜ்ஜி ரெடி , டீ ரெடி , இளையராஜாவும் ரெடி
ஆனா மழை மட்டும் இன்னும் ரெடியாகல்லையே

ArulrajArun

ஐப்பசி மாத பரிதாபங்கள் ;
அதீத கனமழை வேண்டுமா அதீத கனமழை இருக்கு
அக்னி நட்சத்திரம் மாதிரி வெயில் வேனுமா வெயிலும் இருக்கு
கடும் பனிப்பொழிவு வேண்டுமா அதுவும் இருக்கு

கோவிந்தராஜ்

மானம் தானே வேட்டி சட்டை மத்ததெல்லாம் வாழ மட்டை
அந்த பேங்க் சலான் பில் பண்ணு

Marees

ஒரு கிராம் ஆபரண தங்கம் 12,730-க்கு இறங்கிடுச்சு..
மறுபடியும் நமக்கு வட்டி கடையிலிருந்து நோட்டீஸ் வரும் போலயே..

Sasikumar J

ஸ்கூல் படிக்கும்போது விளையாடக் கூப்பிட்டா வரமாட்டான்…
“படிக்கணும் டா”ன்னு அட்வைஸ் பண்ணுவான்!
இப்போ எந்த கம்பெனில எவ்வளவு போனஸ் வாங்குறான்னு கூட சொல்ல மாட்டேங்குறான்…!!

K.Jayaprakash

அரிசி விலை ஏறிடுச்சாம்…
ரேஷன் அரிசி சாப்பிடுறதால தப்பிச்சேன்…

கோழியின் கிறுக்கல்!!

நல்லவனா நடக்கிறவனை விட,
நல்லவனா நடிக்கிறவனை தான் ரொம்ப நம்புது உலகம்!

Mannar & company

தீபாவளியை சிறப்பா கொண்டாடிலாம்.
ஏன் போனஸ் வந்திருச்சா..?
இல்ல.. பஸ் பெருங்களத்தூர தாண்டிடிச்சி!
-தீபாவளிப்பயணம்

𝐒𝐚𝐭𝐡𝐢𝐬𝐡𝐱𝟐𝟎𝟎𝟔

Age 30 :
நிக்கலாம் உடம்புல தெம்பு இல்ல..
எங்க இடம் கிடைச்சாலும் உட்கார்ந்துது வேண்டியது தான்..

லாக் ஆஃப்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel