16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு!

By Kavi

|

Published on 31 Oct 2026, 4:45 PM

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதுகுறித்து அரசு இன்று (அக்டோபர் 31) வெளியிட்ட அறிவிப்பில்,   ”தமிழ்நாடு முதலமைச்சர்ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து, அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கினை வகித்து வருகின்றனர்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2026 முதல் அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் இதனைக் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2026 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.

ADVERTISEMENT

இதனால், 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2026 முதல் 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 1,858 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

ADVERTISEMENT

அரசின் இந்த நடவடிக்கை, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel