ஓபிஎஸ் வீட்டுக்கு சென்ற மு.க.ஸ்டாலின்

By Kavi

|

Published on 31 Oct 2026, 3:13 PM

சென்னையில் தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 31) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில், அவரது இல்லத்திற்குச் சென்ற முன்னாள் முதல்வர்  மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்தின் உடல்நிலை மற்றும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்தச் சந்திப்பு தொடர்பாக அரசியல் ரீதியாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றதாக தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel