அமைச்சர் பர்வேஸிடம் இலவச பயணம் வேண்டாம் விலைவாசி உயர்வை மட்டும் கட்டுப்படுத்துங்கள் என பெண் கட்டிட தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக முதல்வர் விஜய் நவம்பர் 2-ஆம் தேதி புதுக்கோட்டைக்குத்வருகை தர உள்ள நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் நேற்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கிருந்த பெண் கட்டிட தொழிலாளர்கள் அமைச்சரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் சில பெண்கள், “எங்களுக்கு இலவசப் பேருந்து பயணங்கள் கூட வேண்டாம்; நடத்துநர்களும் ஓட்டுநர்களும் தரக்குறைவாகப் பேசுகிறார்கள். விலைவாசி உயர்வை மட்டும் கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு அமைச்சர் பர்வேஸ், ” உங்களின் கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள், நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் பரிந்துரைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெண் தொழிலாளர்கள், “விலைவாசி ஏறிப்போச்சு.. நாங்கள் எல்லோரும் உழைத்துத்தான் சாப்பிடுகிறோம். விலைவாசி உயர்ந்து கொண்டே போனால் நாங்கள் என்ன செய்வது? ஒரு மூட்டை அரிசி 2,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதை வாங்கி நாங்கள் எப்படிச் சாப்பிடுவது? நாங்கள் ஏழைகள். அதனால் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துங்கள் என அமைச்சரிடம் கூறினோம்” என்றனர்.









