ரூ.10 லட்சத்தை 444 நாள் FD-யில் போட்டா எவ்வளவு வட்டி கிடைக்கும்? SBI முதல் சென்ட்ரல் பேங்க் வரை முழுக் கணக்கு!

By Minnambalam Desk

|

Published on 31 Oct 2026, 7:50 AM

பணத்தைப் பாதுகாப்பாக வங்கியில் போட நினைப்பவர்களுக்கு நிலையான வைப்புநிதி (FD) எப்போதும் நம்பகமான வழி.

குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் தரும் 444 நாள் சிறப்பு FD திட்டங்களை நிறையப் பேர் உற்றுப் பார்க்கிறார்கள். இதில் ரூ.10 லட்சம் போட்டால், ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு வட்டி வரும் என்று பார்க்கலாம்.

ADVERTISEMENT

SBI அம்ரித் விருஷ்டி திட்டத்தில் எவ்வளவு கிடைக்கும்?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) 444 நாள் அம்ரித் விருஷ்டி சிறப்பு FD திட்டத்தில், சாதாரண வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 6.45 சதவீத வட்டி கிடைக்கிறது.

ADVERTISEMENT

ரூ.10 லட்சம் போட்டால், 444 நாள் முடிவில் சுமார் ரூ.80,944 வட்டி வரும். அசலோடு சேர்த்து மொத்தம் ரூ.10,80,944 கையில் கிடைக்கும்.

தகுதியுள்ள மூத்த குடிமக்களுக்கு வட்டி 6.95 சதவீதம். அந்தக் கணக்கில் சுமார் ரூ.87,500 வட்டி கிடைக்கும்.

ADVERTISEMENT

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் இன்னும் கொஞ்சம் அதிகம்

இந்த ஒப்பீட்டில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 6.75 சதவீத வட்டி தருகிறது. ரூ.10 லட்சம் போட்டால் 444 நாளுக்குப் பிறகு ரூ.84,832 வட்டி வரும். மொத்தமாக ரூ.10,84,832 கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

PNB-யில் ரூ.82,886 வட்டி

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தன்னுடைய 444 நாள் சிறப்பு FD திட்டத்தில் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 6.60 சதவீத வட்டி கொடுக்கிறது.

ரூ.10 லட்சம் போட்டால், முதிர்வின்போது ரூ.82,886 வட்டி கிடைக்கும். மொத்தம் ரூ.10,82,886 கையில் வரும்.

FD வட்டிக்கு வரி உண்டா?

FD-யில் கிடைக்கும் வட்டியும் வருமானம்தான் என்பதால் அதற்கு வருமான வரி உண்டு. உங்கள் மொத்த வருமானம், வரி வரம்பு ஆகியவற்றைப் பொறுத்து வரி கணக்கிடப்படும்.

TDS பிடித்தம் பொருந்தும் நிலையில், தகுதியுள்ளவர்கள் படிவம் 15G அல்லது 15H கொடுக்கலாம். பணம் போடுவதற்கு முன், அந்த நேரத்தில் வங்கி தரும் வட்டி விகிதம், முதிர்வுத் தொகை, நிபந்தனைகள் எல்லாவற்றையும் ஒருமுறை சரிபார்த்துவிடுவது அவசியம்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel