எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திடீரென முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று அவரை நலம் விசாரித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், ஓபிஎஸ் உடல்நலம் குறித்தும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், ஓ.பன்னீர் செல்வம் விரைவில் முழுமையாகக் குணமடைந்து வழக்கமான மக்கள் பணிகளுக்கும் இயக்கப் பணிகளுக்கும் திரும்ப வேண்டும் என்று தனது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

1973 முதல் 2022 வரை ஏறத்தாழ நான்கரை தசாப்தங்களுக்கும் மேலாக அதிமுகவில் பயணித்தவர் ஓபிஎஸ். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இணைந்தார். திமுக சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்தநிலையில் அவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருப்பதை அறிந்ததும், உதயநிதி சென்று பார்த்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இன்று குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னுக்கு செல்லவில்லை. தனது வீட்டிலேயே தேவர் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தகக்து.









