முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசிய புகார் தொடர்பாக ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் சென்னை சைபர் கிரைம் போலீசார் முன்பு இன்று (அக்டோபர் 31) விசாரணைக்கு ஆஜரானார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 12-ந் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் பேசினார். அப்போது முதல்வர் விஜய்யை விமர்சித்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேசியது தொடர்பான வீடியோக்கள் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டன. இது குறித்து சென்னை மதுரவாயலைச் சேர்ந்த சரவணன் என்பவர், சென்னை மேற்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் செப்டம்பர் 14-ந் தேதி சென்னை மேற்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு போலீசார், வசந்தம் கார்த்திகேயன் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 296, 351(2), 352, 353(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.


இந்த நிலையில், இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக சென்னை சைபர் கிரைம் போலீசார் முன்பு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. இன்று ஆஜரானார்.









