”சொத்து கணக்கு காட்ட இன்னும் டைம் இருக்கு” : அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

By Kavi

|

Published on 31 Oct 2026, 4:14 PM

தமிழக அரசு ஊழியர்கள் தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களை இணையதளம் வாயிலாக தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. 

தமிழக அரசு பணியாளர்களின் நடத்தை விதிகள் 1973 இன் விதி 7(3) ன்-படி அரசு ஊழியர்கள் தங்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கடன்கள் உள்ளிட்ட விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. 

ADVERTISEMENT

 தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தின் இணையதளம் வாயிலாக சொத்து மற்றும் கடன் விவரங்களை பதிவேற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. 

அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் கடன் விவரங்களை 2026 அக்டோபர் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருக்கும் நிலையில், மேலும் இரண்டு மாதங்கள் நீட்டித்து 2026 டிசம்பர் 31ஆம தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. 

இதற்கான கடிதத்தை மனிதவள மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் சமய மூர்த்தி அக்டோபர் 30ஆம் தேதி வெளியிட்டுள்ளார். 

ADVERTISEMENT

அதில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்கள் நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சொத்து மற்றும் கடன் விவரங்களை தவறாமல் தாக்கல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து துறைச் செயலாளர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேபோன்று சொத்து விபரங்களை தாக்கல் செய்ய தவறுபவர்கள் மீது தமிழ்நாடு அரசு பணியாளர்கள் நடத்தை விதிகளின்படி அவர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது 

முன்னதாக யார் பெயரிலும் அரசு ஊழியர்கள் சொத்துக்கள் வாங்கி இருந்தாலும் அவற்றையும் குறிப்பிட்டு, அந்த நபருக்கும் அரசு ஊழியருக்கும் என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும் என்றும் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel