மூத்த பத்திரிக்கையாளர் நிதி ரஸ்தானை (49) காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா (56) கரம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று முதல் புதிய பயணம் தொடங்கியுள்ளது” என பதிவிட்டுள்ளார்.
அதேபோன்று நிதி ரஸ்தான் தனது சமூக வலைதள பக்கத்தில், ”திருமணம் முடிந்துவிட்டது” (its done bro) என்று கூறி திருமண புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.
இவர்களது திருமணம் நேற்று ஸ்ரீ நகரில், நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நடந்துள்ளது.
இதில் உமர் அப்துல்லாவின் பெற்றோரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா மற்றும் மோலி அப்துல்லா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், உமர் அப்துல்லாவின் மூன்று சகோதரிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களும் கலந்துகொண்டனர். நிதி ராஜ்தானின் பெற்றோரும், மூத்த பத்திரிகையாளருமான எம்.கே. ராஜ்தான் மற்றும் சரளா ராஜ்தான் ஆகியோரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
உமர் அப்துல்லாவுக்கு ஏற்கெனவே பாயல் என்பவருடன் கடந்த 1994ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் டெல்லியில் ஒன்றாக பணியாற்றிய போது பழக்கம் ஏற்றப்பட்ட நிலையில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஜாஹிர், ஜமீர் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இருவரும் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தொடர்ந்து விவாகரத்து கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
கடந்த ஜூலை 31-ம் தேதி இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற ஒப்புக்கொண்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவருக்கும் விவாகரத்து வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து உமர் அப்துல்லாவும், நிதியும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
நிதி ரஸ்தாவ் இந்தியாவின் பிரபல மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர். இவர் நீண்ட காலமாக NDTV செய்தி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக தேசிய அரசியல் மற்றும் சமகால நிகழ்வுகள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் தேசியளவில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.









