”கெரியரின் உச்சம்” : இது சூர்யாவின் அரசியல் டயலாக்!

By Kavi

|

Published on 31 Oct 2026, 10:42 PM

பிரபல இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ (Scene) படத்தின் ட்ரெய்லர் இன்று (அக்டோபர் 31) வெளியாகியுள்ளது. 

படத்தின் நாயகனான இன்பராஜ் (சூர்யா) தனது வேலையை ராஜினாமா செய்வதில் இருந்து ட்ரெய்லர் தொடங்குகிறது. 

ADVERTISEMENT

அப்போது சூரியாவிடம்,  ”இப்போது கெரியரின் உச்சத்தில் இருக்க, ரிசைன் பன்னிட்டு என்ன பன்ன போற” என சீனியர் அதிகாரி கேட்க… ”பாலிடிக்ஸில் சேர போறேன்” என்று சொல்வது கவனம் பெற்றுள்ளது. 

முதல்வர் விஜய் சினிமாவில் தன்னுடைய கெரியரின் உச்சத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளதாக தனது பிரச்சார கூட்டங்களில் கூறி வருகிறார்,

ADVERTISEMENT

இந்தசூழலில் சுவாரஸ்யமான ஆக்‌ஷன் மற்றும் திரில்லர் திருப்பங்களுடன் சேர்ந்து, அரசியல் சம்பந்தப்பட்ட வசனமும் ’சீன்’  படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ட்ரெய்லரின் இறுதியில் “ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா” என்ற சூர்யாவின் முந்தைய படமான சிங்கம் படத்தின் டயலாக்கும் இடம்பெற்றுள்ளது. 

ADVERTISEMENT

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தை சூர்யாவின் ழகரம் மற்றும் 2டி  ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. 

நாயகியாக நஸ்ரியா, வில்லனாக நஸ்லென் நடித்துள்ள இப்படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார். 

முன்னதாக சூர்யா நடிப்பில் இந்தாண்டு வெளியான கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்கள் வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel