எரிசக்திக்குப் பஞ்சம் இல்லை, வழிகளில்தான் தடை! ஜி20 மேடையில் பொருளாதாரத் தடைகளைச் சாடிய ஜெய்சங்கர்

By Minnambalam Desk

|

Published on 1 Nov 2026, 5:17 PM

உலகில் எரிசக்தி இல்லாமல் இல்லை, ஆனால் தேவைப்படுபவர்களிடம் அது போய்ச் சேர முடியாதபடி தடைகள் குறுக்கே நிற்கின்றன என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பேசியுள்ளார்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்த ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை அவர் பேசினார். நாடுகளுக்கு இடையிலான அரசியல் மோதல்கள், பொருளாதாரத் தடைகள், முக்கியக் கடல் வழிகளில் ஏற்படும் இடையூறுகள் ஆகியவை உலக எரிசக்தி வர்த்தகத்தைப் பாதிக்கின்றன என்றார். எரிசக்தி விலையைத் தங்களுக்குச் சாதகமாக வளைக்க, வர்த்தகத்தையும் உள்கட்டமைப்பையும் குறிவைக்கும் போக்கு இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

ADVERTISEMENT

பிரச்சினை உற்பத்தியில் இல்லை

இன்று உலகம் சந்திக்கும் நெருக்கடிக்கு எரிசக்தி உற்பத்திப் பற்றாக்குறை காரணம் இல்லை என்று அவர் தெளிவாகச் சொன்னார். கணிக்க முடியாமல் மாறும் விநியோகம், போக்குவரத்துத் தடங்கல்கள், ஏறும் செலவு, வாங்குவதில் வரும் சிக்கல்கள் ஆகியவைதான் உண்மையான தலைவலி என்று மேலும் அவர் கூறினார்.

ADVERTISEMENT

தடைகளை அவர் சுட்டிக்காட்டிய விதம்

ஈரானிய எண்ணெய் விற்பனைக்கு அமெரிக்கா விதித்த தடைகள், மேற்கு ஆசியாவில் எரிசக்தி விநியோகத்துக்கு வந்த பாதிப்பு, ரஷ்ய டீசல் விற்பனைக்கான தடையை நீக்கும் முடிவு ஆகியவை உலகச் சந்தையில் பெரிய விவாதத்தை உண்டாக்கியுள்ளன.

ADVERTISEMENT

இப்படிப்பட்ட தடைகளும், முக்கியப் போக்குவரத்துப் பாதைகளில் போடப்படும் கட்டுப்பாடுகளும் எரிசக்திச் சந்தையைத் தொடர்ந்து குழப்பிக்கொண்டே இருக்கின்றன என்பது ஜெய்சங்கரின் கருத்து.

பாதிக்கப்படுவது ஏழை நாடுகள்

குறைந்த வருமானம் உள்ள நாடுகள் படும் பாட்டை உலகம் போதுமான அளவுக்குக் கண்டுகொள்வதில்லை என்று அவர் வருத்தப்பட்டார். எண்ணெய்க்கு ஒரு நியாயம், எரிவாயுவுக்கு இன்னொரு நியாயம் என்று வசதிக்கேற்பப் பாகுபாடு காட்டுவதாகவும், சிலவற்றுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுப்பதாகவும் விமர்சித்தார்.

இந்தியா கேட்பது என்ன?

  • வீடுகளின் சமையல் எரிவாயுத் தேவைக்கு, தடையில்லாத நம்பகமான எல்பிஜி விநியோகம் வேண்டும்.
  • கனிம வளங்களைத் தேடுவதிலிருந்து மறுசுழற்சி வரை செயல்படும் தேசிய முக்கியக் கனிமங்கள் இயக்கத்தை இந்தியா நடத்திவருகிறது.
  • முக்கியக் கனிமங்களை மறுசுழற்சி செய்ய, ஜி20 நாடுகளின் ஒத்துழைப்போடு புதிய முயற்சி தொடங்க இந்தியா முன்மொழிந்துள்ளது.
  • எரிசக்திச் சேமிப்பு, சிறிய அணு உலைகள், பசுமை ஹைட்ரஜன், உயிரி எரிபொருள் ஆகியவற்றில் முதலீடு அதிகரிக்க வேண்டும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel