சேகர் பாபுவிடம் போலீஸ் விசாரணை!

By Pandeeswari Gurusamy

|

Published on 1 Nov 2026, 3:05 PM

Sekarbabu Press Meet

முதல்வர் விஜய் குறித்து பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு இன்று (நவம்பர் 1) காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

சென்னையில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி தவெக அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜோசப் விஜய்யை தரக்குறைவான வகையிலும் சர்ச்சைக்குரிய வகையிலும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து தவெக உறுப்பினர் ஜெகதீஸ்வரி அளித்த சென்னை எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்குச் சமன் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்குக் காவல் நிலையத்தில் ஆஜரான சேகர்பாபுவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel