Live Updates- நேரலை தகவல்கள்
17-வது தமிழக சட்டசபை தேர்தலுக்கான (Tamil Nadu Assembly Election) வாக்குப் பதிவு 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக வாக்குப் பதிவு தொடர்பான லைவ் அப்டேட் செய்திகளை மின்னம்பலத்தின் இந்தப் பக்கத்தில் நேரலையாக காணலாம்.
- தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தம் 85.12% வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடு விடுதலை அடைந்தது முதல் இதுவரை நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் முதல் முறையாக 85.10% வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
- இரவு 9 மணி அளவிலான வாக்குப் பதிவு விவரம்:
அரியலூர்-87.40%
செங்கல்பட்டு- 85.29%
சென்னை 83.73%
கோவை- 84.79%
கடலூர் 85.49%
தருமபுரி 90.14%
திண்டுக்கல் 89.06%
ஈரோடு 90.10%
கள்ளக்குறிச்சி 88.25%
காஞ்சிபுரம் 87.39%
கன்னியாகுமரி 75.61%%
கரூர் 92.64%
கிருஷ்ணகிரி 85.29%
மதுரை 80.55%
மயிலாடுதுறை 82.14%
நாகை 86.30%
நாமக்கல் 90.13%
பெரம்பலூர் 85.50%
புதுக்கோட்டை 83.89%
ராமநாதபுரம் 77.03%
ராணிப்பேட்டை 89.869%
சேலம் 90.73%
சிவகங்கை 76.61%
தென்காசி 82.40%
தஞ்சாவூர் 80.61%
நீலகிரி 78.95%
தேனி 81.92%
திருவள்ளூர் 83.76%
திருவாரூர் 83.77%
தூத்துக்குடி 80.55%
திருச்சி 85.44%
திருநெல்வேலி 77.93%
திருப்பத்தூர் 88.96%
திருப்பூர் 88.59%
திருவண்ணாமலை 89.46%
வேலூர் 88.76%
விழுப்புரம் 88.99%
விருதுநகர் 84.90% - மாலை 6 மணி வரை 84.29% வாக்குகள் பதிவு
- மே 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 62 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.
- வாக்குப் பதிவு முடிவடைந்த வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வருகின்றன.
- தமிழகத்தில் வரலாறு காணாத வாக்குப் பதிவுக்கு சாத்தியம் இருப்பதாக நேற்று மின்னம்பலத்தில் எழுதி இருந்தோம். அதைப் போலவே இன்றைய வாக்குப் பதிவு 80%-த்தை தாண்டி 90%-த்தை எட்டக் கூடும்.
- தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தது.
- தமிழகத்தில் வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் வரிசைகளில் காத்திருப்பவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது.
- மொத்தம் 5.76 கோடி வாக்காளர்களில் மாலை 5 மணி வரை 4.7 கோடி பேர் வாக்களித்துள்ளனர்
- குறைந்தபட்ச வாக்குப் பதிவு மாவட்டங்கள்
கன்னியாகுமரி – 73.44%
ராமநாதபுரம் – 74.41%
சிவகங்கை – 74.44% - தற்போது வரை மிக அதிகமாக வாக்குப் பதிவு மாவட்டங்கள்
கரூர் 89.32%
சேலம் 88.02%
நாமக்கல் 87.63% - மாலை 5 மணி நிலவரம்
அரியலூர்-83.09%
செங்கல்பட்டு- 82.41%
சென்னை 81.34%
கோவை- 82.33%
கடலூர் 81.91%
தருமபுரி 87.28%
திண்டுக்கல் 86.35%
ஈரோடு 87.59%
கள்ளக்குறிச்சி 84.22%
காஞ்சிபுரம் 84.92%
கன்னியாகுமரி 73.44%
கரூர் 89.32%
கிருஷ்ணகிரி 82.40%
மதுரை 77.89%
மயிலாடுதுறை 78.41%
நாகை 83.15%
நாமக்கல் 87.63%
பெரம்பலூர் 82.75%
புதுக்கோட்டை 81.55%
ராமநாதபுரம் 74.41%
ராணிப்பேட்டை 86.28%
சேலம் 88.02%
சிவகங்கை 74.44%
தென்காசி 79.28%
தஞ்சாவூர் 78.07%
நீலகிரி 75.90%
தேனி 78.73%
திருவள்ளூர் 80.70%
திருவாரூர் 80.65%
தூத்துக்குடி 77.56%
திருச்சி 82.76%
திருநெல்வேலி 75.10%
திருப்பத்தூர் 85.28%
திருப்பூர் 86.33%
திருவண்ணாமலை 85.59%
வேலூர் 85.06%
விழுப்புரம் 85.45%
விருதுநகர் 82.16% - மாலை5 மணி நிலவரப்படி மேட்டூர், ஏற்காடு, கரூரில் 85 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவு.
- பகல் 3 மணி வரை குறைவான வாக்குகள் பதிவான மாவட்டங்கள்: கன்னியாகுமரி 61.95%; திருநெல்வேலி 62.84%; ராமநாதபுரம் 63.14%; நீலகிரி 63.67%; சிவகங்கை 64.74%முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி 70.24%; எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதி 75.84%; சீமானின் காரைக்குடி தொகுதி 61.84%
- விஜய்யின் பெரம்பூர் தொகுதி 71.84%; விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதி 68.02% வாக்குகள் பதிவு
- பகல் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில்70% வாக்குகள் பதிவாகி உள்ளன.
அரியலூர்- 68.97%
செங்கல்பட்டு- 69.46%
சென்னை 68.13%
கோவை- 71.16 %
கடலூர் 68.53%
தருமபுரி 74.68%
திண்டுக்கல் 74.35%
ஈரோடு 75.61%
கள்ளக்குறிச்சி 71.11%
காஞ்சிபுரம் 72.51%
கன்னியாகுமரி 61.95
கரூர் 76.08%
கிருஷ்ணகிரி 70.07%
மதுரை 67.15%
மயிலாடுதுறை 65.80%
நாகை 69.96%
நாமக்கல் 76.43%
பெரம்பலூர் 70.54%
புதுக்கோட்டை 69.85%
ராமநாதபுரம் 63.14%
ராணிப்பேட்டை 72.46%
சேலம் 75.79%
சிவகங்கை 64.74%
தென்காசி 67.14%
தஞ்சாவூர் 66.65%
நீலகிரி 63.67%
தேனி 67.68%
திருவள்ளூர் 68.07%
திருவாரூர் 68.43%
தூத்துக்குடி 65.18%
திருச்சி 71.05%
திருநெல்வேலி 62.84%
திருப்பத்தூர் 71.46%
திருப்பூர் 75.38%
திருவண்ணாமலை 72.19%
வேலூர் 71.23%
விழுப்புரம் 71.65%
விருதுநகர் 70.24% - தமிழகத்தில் இதுவரை 4 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
- பெரும்பாலான தொகுதிகளில் வாக்குச் சாவடிகளில் தொடர்ந்து விறுவிறுப்பான வாக்குப் பதிவு
- 42 தொகுதிகளில் 60%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவு
- பகல் 1 மணி நிலவரம்: முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி 56.59%; எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதி 60.98%; சீமானின் காரைக்குடி தொகுதி 51.36%
- விஜய்யின் பெரம்பூர் தொகுதி 56.24%; விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதி 55.95% வாக்குகள் பதிவு
- தமிழகத்தில் பகல் 1 மணி வரை 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளன.
அரியலூர்- 55.18%
செங்கல்பட்டு- 56.28%
சென்னை 54.58%
கோவை- 58.24%
கடலூர் 55.13%
தருமபுரி 59.02%
திண்டுக்கல் 59.79%
ஈரோடு 61.79%
கள்ளக்குறிச்சி 57.15%
காஞ்சிபுரம் 58.98%
கன்னியாகுமரி 50.35%
கரூர் 60.77%
கிருஷ்ணகிரி 56.21%
மதுரை 54.75%
மயிலாடுதுறை 53.59%
நாகை 57.07%
நாமக்கல் 62.51%
பெரம்பலூர் 57.55%
புதுக்கோட்டை 56.78%
ராமநாதபுரம் 51.54%
ராணிப்பேட்டை 58.62%
சேலம் 61.42%
சிவகங்கை 53.50%
தென்காசி 54.24%
தஞ்சாவூர் 54.83%
நீலகிரி 50.42%
தேனி 55.63%
திருவள்ளூர் 55.45%
திருவாரூர் 56.00%
தூத்துக்குடி 52.55%
திருச்சி 57.66%
திருநெல்வேலி 50.73%
திருப்பத்தூர் 57.42%
திருப்பூர் 62.97%
திருவண்ணாமலை 58.23%
வேலூர் 57.49%
விழுப்புரம் 58.23%
விருதுநகர் 57.27% - பகல் 1 மணி நிலவரம்: திருச்செங்கோடு 64.73%; வேலூர் 57.39%.
- ”என் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். இந்த தேர்தலில் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். . ஒன்னும் புரியவில்லை.. தேர்தல் ரொம்ப சூடாகத்தான் இருக்கிறது”- மதுரையில் வாக்களித்த பின் மு.க. அழகிரி பேட்டி
”தமிழகத்தில் எதுக்கு மாற்றம் வேண்டும்? நல்லாதானே இருக்கு?- நடிகர் சிம்பு - வாணியம்பாடியில் திமுக- தவெகவினர் இடையே கைகலப்பு.
- கலசப்பாக்கத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்தை சுயேட்சை வேட்பாளரின் முகவர் உடைத்ததால் பதற்றம்
- முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி 37.06% ; எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதி 39.94%; சீமானின் காரைக்குடி தொகுதி 33.80%
- விஜய்யின் பெரம்பூர் தொகுதி 36.26%; விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதி 37.24% வாக்குகள் பதிவு
- தமிழ்நாட்டில் முற்பகல் 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு
- திருப்பூர் – 42.45%
- திருவள்ளூர் – 36.71%
- சென்னை – 35.47%
- காஞ்சிபுரம் – 39.48%
- செங்கல்பட்டு – 37.17%
- வேலூர் – 37.99%
- திருப்பத்தூர் – 37.49%
- ராணிப்பேட்டை – 38.70%
- திருவண்ணாமலை – 38.25%
- விழுப்புரம் – 38.40%
- கள்ளக்குறிச்சி – 37.30%
- சேலம் – 40.56%
- நாமக்கல் – 41.41%
- தர்மபுரி – 38.28%
- கிருஷ்ணகிரி – 36.53%
- ஈரோடு – 41.00%
- திருப்பூர் – 42.45%
- நீலகிரி – 32.62%
- கோயம்புத்தூர் – 38.62%
- திண்டுக்கல் – 39.05%
- கரூர் – 39.70%
- திருச்சிராப்பள்ளி – 38.08%
- பெரம்பலூர் – 37.89%
- அரியலூர் – 36.11%
- கடலூர் – 36.30%
- நாகப்பட்டினம் – 37.77%
- மயிலாடுதுறை – 35.33%
- திருவாரூர் – 37.19%
- தஞ்சாவூர் – 36.54%
- புதுக்கோட்டை – 37.12%
- சிவகங்கை – 35.35%
- மதுரை – 36.22%
- தேனி – 37.35%
- விருதுநகர் – 38.05%
- இராமநாதபுரம் – 34.02%
- தூத்துக்குடி – 35.16%
- திருநெல்வேலி – 34.05%
- தென்காசி – 36.31%
- கன்னியாகுமரி – 34.68%
- கடலூரில் 36.30% வாக்குகள் பதிவு
- சென்னையில் 35.47% வாக்குகள் பதிவு
- நாகையில் 37.56% வாக்குகள் பதிவு
- திருப்பூரில் 42.56% வாக்குகள் பதிவு
- நாங்குநேரியில் 32.23% வாக்கு பதிவு
- ராதாபுரத்தில் 32.04% வாக்கு பதிவு
- அம்பாசமுத்திரத்தில் 36.85% வாக்குகள் பதிவு
- ராணிப்பேட்டையில் 38.68% வாக்குகள் பதிவு
- பாளையங்கோட்டையில் 28.81% ஓட்டுகள் பதிவு
சேலத்தில் 35% வாக்குகள் பதிவு - ராமநாதபுரத்தில் 27.09% வாக்குகள் பதிவு
- மதுரையில் மு.க.அழகிரி வாக்களித்தார்
- நெல்லையில் 34.17% வாக்குகள் பதிவு
- சென்னையில் நடிகை திரிஷா வாக்களித்தார்
- வாக்காளர்கள் வாக்களிப்பதை வீடியோ எடுத்தால் 2 ஆண்டு சிறை தண்டனை- தேர்தல் ஆணையம்
- சங்கராபுரம் தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு.
- மாற்றம் தேவை இல்லை என நடிகர் அஜித் கூறவில்லை- மேலாளர் சுரேஷ் சந்திரா
- கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னையில் வாக்களித்தார்
- திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி சென்னையில் வாக்களித்தார்
- சென்னை விருகம்பாக்கத்தில் நடிகர் வடிவேலு வாக்களித்தார்.
- காலை 9 மணி நிலவரம்: முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 17.51% வாக்கு பதிவு
- எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 19.07% வாக்கு பதிவு
- சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 15.74% வாக்கு பதிவு
- விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 16.92% வாக்கு பதிவு.
- விஜய் போட்டியிடும் திருச்சி (கிழக்கு) தொகுதியில் 17.72% வாக்கு பதிவு
- திரும்ங்கலத்தில் வாக்குச் சாவடி அருகே முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டதால் பதற்றம்.
- தமிழகத்தில் வாக்குப் பதிவை இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை

- காலை 9 மணி வரை வாக்குப் பதிவு
ஈரோடு கிழக்கு: 21.47%
அவிநாசி: 21.51%
காங்கேயம்: 20.97%
கவுண்டம்பாளையம்: 20.26%
குமாரபாளையம்: 22.46%
திருச்செங்கோடு: 21.04% - கோவையில் அண்ணாமலை வாக்களித்தார்
- காலை 9 மணி வரை பதிவான வாக்குகள்:
ஈரோடு 19.50%
கோவை 18.45%
காஞ்சிபுரம் 18.78%
நாமக்கல் 19.83%
திருப்பூர் 20.38%
திண்டுக்கல் 18.28%
கரூர் 18.78%
விருதுநகர் 18.02%
திருவள்ளூர்- 16.50%
மதுரை 17.20%
பெரம்பலூர் 17.68%
திருநெல்வேலி15.80%
கன்னியாகுமரி15.20%
தஞ்சாவூர்17.55% - தமிழ்நாடு முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 17.69% வாக்குகள் பதிவாகி உள்ளன
- நெல்லையில் 15.96% வாக்குகள்; செங்கல்பட்டு 17.17% வாக்குகள் பதிவு
- தமிழகத்தில் மாற்றம் தேவை இல்லை என கூறிய நடிகர் அஜித்துக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தார்
- ”தமிழ்நாடு வெல்லும்”- சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் வாக்களித்த முதல்வர் ஸ்டாலின்
- சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் வாக்களித்தார்
- சென்னை தி.நகரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார்
- நீலாங்கரையில் தவெக தலைவர் விஜய் வாக்களித்தார்
- அனைவரும் வாக்களியுங்கள்.. சாலிகிராமத்தில் வாக்களித்த பிரேமலதா விஜயகாந்த்
- தவெக தலைவர் விஜய், சென்னை நீலாங்கரை வாக்குச் சாவடியில் வாக்களிக்கிறார்
- அவிநாசியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்களித்தார்
- ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி வாக்களித்தார்.
- 1957 முதல் தொடர்ந்து வாக்களித்து வருகிறேன்; தொங்கு சட்டசபை வராது- அடையாறில் வாக்களித்த கி.வீரமணி
- தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் தமக்கு எப்போதுமே திருப்தி இல்லை- நீலாங்கரையின் வாக்களித்த பின் சீமான்
- சென்னை தேனாம்பேட்டையில் மநீம தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்
- கோவை, திருச்சி, உத்திரமேரூர் உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது.
- அடையாறு வாக்குச் சாவடியில் வாக்களித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
- ”வாக்காளர்களே மகேசன்கள்.. வாக்குச் சாவடிகளே கோவில்கள்”.. வாக்களித்த பின் தமிழிசை சவுந்தரராஜன்
- ”வெளியே வா.. ஓட்டுப் போடு”- மயிலாப்பூரில் வாக்களித்த நடிகை குஷ்பு
- டெல்டா மண்டலத்தில் பெரும்பாலான தொகுதிகளை திமுக கைப்பற்றும்- திருச்சியில் வாக்களித்த அமைச்சர் கே.என்.நேரு
- ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வாக்களித்தார்
- எடப்பாடி சிலுவம்பாளையத்தில் குடும்பத்தினருடன் வாக்களித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
- ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார்
- விருகம்பாக்கத்தில் மயிலாப்பூர் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார்
- மயிலாப்பூரில் நடிகை குஷ்பு வாக்களித்தார்
- சென்னை விருகம்பாக்கத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வாக்களித்தார்

- 11-வது தோல்வியை சந்திக்கப் போகும் எடப்பாடி பழனிசாமி- திருமயத்தில் வாக்களித்த அமைச்சர் ரகுபதி
- தமிழகம் முழுவதும் வாக்குச் சாவடிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது; வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்
- பீர்க்கரன்கரணை வாக்குச் சாவடியில் டிஆர் பாலு எம்பி வாக்களித்தார்.
- நீலாங்கரையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.
- விழுப்புரம் 182-வது வாக்குச் சாவடியில் விவிபேட் இயந்திரம் பழுதானதால் வாக்குப் பதிவு தாமதம்
- திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முத்தரசன் வாக்களித்தார்.
- சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நடிகர் கவுதம் கார்த்திக் வாக்களித்தார்.
- காரைக்குடியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வாக்களித்தார்.
- கோபிசெட்டிபாளையத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வாக்களித்தார்.
- கோவை அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி 76 ல் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் மாதிரி வாக்குப்பதிவு தாமதமானது.
- தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் தற்போது வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.
- சென்னை திருவான்மியூர் பாரதிதாசன் பள்ளியில் நடிகர் அஜித்குமார் காலை 7 மணிக்கு முன்னதாகவே முதல் நபராக வாக்களித்துவிட்டுச் சென்றார்.
- வாக்குச் சாவடிகளுக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை.
- சென்னை திருவான்மியூர் பாரதிதாசன் பள்ளியில் வாக்களிக்க வருகை தந்த நடிகர் அஜித். அவரது ரசிகர்கள் பெருந்திரளாக குவிந்தனர்.
- காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும் நிலையில் வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
- விழுப்புரம் 182-வது வாக்குச் சாவடியில் மாதிரி வாக்குப் பதிவில் விவிபேட் இயந்திரம் பழுதானது தெரியவந்தது. இதனையடுத்து மாற்று விவிபேட் இயந்திரம் பொருத்தப்பட்டது.
- தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளும் வாக்குப் பதிவுக்கு தயார் நிலையில் உள்ளன
- வாக்குப் பதிவு நடைபெறுவதால் தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன; சுற்றுலா தலங்களி ல் பணிபுரியும் பணியாளர்கள் வாக்களிப்பதற்காக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
- வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுக்கு முன்பாக 50 மாதிரி வாக்குப் பதிவுகள் செய்து பார்ப்பது மாதிரி வாக்குப் பதிவு.
- SIR மூலம் இரட்டை வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தில் வரலாறு காணாத வாக்குப் பதிவு இருக்கும் என்பது எதிர்பார்ப்பு.
- வாக்குச் சாவடிகளில் அனைத்து கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் விவிபேட் இயந்திரத்தில் சரியாக பதிவாகிறதா? என சரிபார்க்க இந்த மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்படும்.
- தேர்தல் பணிகளில் 3.40 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- வாக்குப் பதிவுக்கு முந்தைய மாதிரி வாக்குப் பதிவு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற்று வருகிறது.
- தமிழக பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நிலவுகிறது.
- தமிழகத்தில் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்; முதல் முறை வாக்காளர்கள் 14 லட்சம் பேர்.
- சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 31 கம்பெனி துணை ராணுவப் படை ஈடுபடுகிறது
- தேர்தல் பாதுகாப்பு பணியில் 23,000 துணை ராணுவப் படையினர் ஈடுபடுகின்றனர்
- தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1.47 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
- தமிழகம் முழுவதும் 5,938 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை
- மொத்தம் 75,064 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
- 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
