பொங்கல் அன்று நடைபெற உள்ள சி.ஏ பவுண்டேசன் தேர்வு தேதிகளை மாற்றுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (நவம்பர் 24) வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “சி.ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர்.
தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அறுவடைத் திருநாளான பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு மத்திய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் ICAI தலைவர் சி.ஏ.ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
எத்தனை முறை சொன்னாலும் மத்திய அரசு திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. மத்திய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ. 110 கோடியுடன் காத்திருக்கும் பஞ்சாப் அணி… ஐ.பி.எல். ஏலத்தில் என்ன நடக்கும் ?