ரூ. 110 கோடியுடன் காத்திருக்கும் பஞ்சாப் அணி… ஐ.பி.எல். ஏலத்தில் என்ன நடக்கும் ?

Published On:

| By Selvam

ஐ.பி.எல் ஏலம் இன்று (நவம்பர் 24) சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் எந்த அணி எவ்வளவு தொகைக்கு வீரர்களை ஏலம் எடுக்கலாம் என்று பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.55 கோடி செலவழிக்கலாம். 1 வெளிநாட்டு வீரர் உள்பட 5 பேரை தக்க வைத்துள்ளது.

டெல்லி கேபிட்டல் அணி ரூ.73 கோடி செலவழிக்க முடியும். இந்த அணி ஒரு வெளிநட்டு வீரர், உள்பட 4 பேரை தக்க வைத்து கொண்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் ரூ.69 கோடியில் வீரர்களை வாங்கலாம். ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட 5 பேரை தக்க வைத்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.51 கோடி செலவழிக்கலாம். இந்த அணி இரு வெளிநாட்டு வீரர்கள் உள்பட 6 பேரை தக்கவைத்துள்ளது.

லக்னோ அணி ரூ.69 கோடிக்கு வீரர்களை வாங்கலாம். இந்த அணி ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட 5 பேரை தக்கவைத்து கொண்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் ரூ.45 கோடி மட்டுமே செலவழிக்க முடியும். 5 உள்நாட்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளது.

பஞ்சாப் அணி ரூ.110 கோடி செலவழிக்க முடியும். இரு உள்நாட்டு வீரர்களை மட்டுமே இந்த அணி தக்கவைத்து கொண்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.41 கோடி மட்டுமே செலழிக்க முடியும். ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட 6 பேரை இந்த அணி தக்கவைத்துள்ளது.

பெங்களுரு அணி ரூ.83 கோடிக்கு வீரர்களை வாங்கலாம். 3 உள்நாட்டு வீரர்களை மட்டுமே இந்த அணி தக்க வைத்துள்ளது.

ஹைதரபாத் அணி ரூ.45 கோடிக்கு வீரர்களை வாங்கலாம். இந்த அணி 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 5 பேரை தக்க வைத்துள்ளது.

குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்… ‘இந்தியா’ கூட்டணிக்கு திருமா எச்சரிக்கை!

ஆரஞ்சு அலர்ட்: நாகையில் விடிய விடிய அறுவடைப் பணிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment