விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு பிறகு த்ரிஷா… தக் லஃப் சீக்ரெட்டை உடைத்த சிம்பு

Published On:

| By christopher

simbu reveal secret of thuglife about him and trisha

‘தக் லைஃப்’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழாவில் விண்ணைத்தாண்டி வருவாயா குறித்தும் கமல் ஹாசன் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் நடிகர் சிம்பு. simbu reveal secret of thuglife about him and trisha

‘நாயகன்’ படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது ‘தக் லைஃப்’ திரைப்படம்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அப்படத்தின் முதல் சிங்கிளான ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்றது.

இதில் மணிரத்னம், கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

அப்போது சிம்பு பேசுகையில், ‘கமல் சார் என்னுடைய ஆன் ஸ்கிரீன் குரு. இந்தப் படத்தில் நான் கனவுல நினைக்கிற அத்தனை விஷயங்களும் நடந்திருக்கு.

‘செக்கச் சிவந்த வானம்’ படத்துல மெதுவாக அனைத்து விஷயங்களையும் கத்துக்கிட்டேன். சின்ன வயசுல இருந்து குழந்தை நட்சத்திரமாக நடிச்சிருக்கேன். இன்னைக்கு நடிகராக அவர்கூட நடிச்சிருக்கேன். அவரும் என்னை நல்லபடியாகப் பார்த்துகிட்டாரு.

ADVERTISEMENT

படத்தைப் பற்றி பெரிதளவில் சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பாக இது வித்தியாசமான படமாக இருக்கும். ஃபேன் பாயாக சொல்றேன் இந்த படத்துல நடிச்சதுக்கு எனக்குப் பெருமை.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்கு அப்புறம் த்ரிஷா, ’நாம மறுபடியும் ஜோடி சேரனும்னு பேன்ஸ் ஆசப்படுறாங்க’னு சொல்லுவாங்க. இந்த படத்துல அது நடந்துருக்கு.

அசோக் செல்வனின் திறமையை எப்போதும் நான் பாராட்டுவேன். அவரது படங்களை பார்த்துவிட்டு அவருக்கு போன் செய்து பல தடவை ஊக்குவித்துள்ளேன்” என்று பேசினார்.

தக் லஃப் படத்தின் கதாப்பாத்திரங்கள் இதுவரை எதுவும் வெளிவராத நிலையில், த்ரிஷாவுடன் சிம்பு ஜோடி சேர்ந்துள்ளது தற்போது தெரியவந்ததை அடுத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது தக் லைஃப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share