ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) சார்பில் செப்டம்பர் 28 முதல் 30 வரை நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கிளை சார்ந்த வங்கிப் பணிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், முக்கியமான வேலைகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு SBI அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்து 5 நாட்கள் கிளை சேவையில் சிக்கல்?
செப்டம்பர் 26 நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை. அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
இதனால் செப்டம்பர் 26 முதல் 30 வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் வழக்கமான கிளை சேவைகளைப் பெறுவதில் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படலாம்.
எந்தப் பணிகளை முன்கூட்டியே முடிக்க வேண்டும்?
வங்கி கிளைக்கு நேரில் சென்று செய்ய வேண்டிய பணிகள், ஆவணங்களைச் சமர்ப்பித்தல், ஊழியர்களின் நேரடி உதவி தேவைப்படும் சேவைகள் உள்ளிட்டவற்றை செப்டம்பர் 26க்குள் முடிப்பது நல்லது.
காசோலை தொடர்பான சில பணிகள் மற்றும் பிற கிளை சார்ந்த சேவைகளிலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ATM, YONO மூலம் பணிகள் செய்யலாம்
வேலைநிறுத்த காலத்திலும் ATM, ADWM மற்றும் Customer Service Points மூலம் கிடைக்கும் சேவைகளைப் பயன்படுத்தலாம். வழக்கமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு SBI-யின் இணைய வங்கி, YONO, மொபைல் பேங்கிங் மற்றும் UPI சேவைகளைப் பயன்படுத்த முடியும்.
அக்டோபரிலும் தொடரும் போராட்டம்
செப்டம்பர் 28 முதல் 30 வரையிலான வேலைநிறுத்தத்துக்குப் பிறகும் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை இல்லையெனில், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள UFBU திட்டமிட்டுள்ளதாக SBI தெரிவித்துள்ளது.
