அனிருத் – காவியா மாறன் திருமண வரவேற்பில் சங்கீதா விஜய்

By Kavi

|

Published on 21 Nov 2026, 11:49 PM

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் இன்று  (நவம்பர் 21) அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் முதலமைச்சர் விஜய், அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து அவரது மனைவி சங்கீதாவும் தனியாக வருகை தந்தார். பின்னர் மணமக்கள் அனிருத் மற்றும் காவ்யா மாறனைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

ADVERTISEMENT

தொடர்ந்து காவேரி மாறன் – சங்கீதா இருவரும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர். 

அட்லீ – பிரியாவும் சங்கீதாவை சந்தித்து நலம் விசாரித்தனர். 

ADVERTISEMENT

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முதல்வர் விஜய்யின் தாயார் ஷோபாவும் தனியாக வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel