காவியா -அனிருத் தம்பதியினருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வாழ்த்து கூறியுள்ளார்.
சன் குழும தலைவர் கலாநிதி மாறன் – காவேரி மாறனுக்கு இன்று (நவம்பர் 21) சோனியா காந்தி அனுப்பியுள்ள கடிதத்தில், ”உங்களின் அன்பு மகள் காவியாவின் திருமணத்திற்கு என்னை நேரில் வந்து அழைத்ததற்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மங்களகரமான நிகழ்வுக்காக உங்கள் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் தயாராகி வருவார்கள் என்று நம்புகிறேன். மதிப்பிற்குரிய கலைஞரின் ஆசியுடன், இந்தக் கொண்டாட்டங்கள் நிச்சயமாக அழகாகவும், சிறப்பாகவும் நடைபெறும்.

எனது ஆசீர்வாதங்களையும், மனமார்ந்த வாழ்த்துகளையும் காவியா மற்றும் அனிருத்திடம் தவறாமல் தெரிவிக்கவும். அவர்கள் இருவரும் தங்களது வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் வலிமையாகவும், நல்ல நண்பர்களாகவும், அன்புடனும் இருந்து, இணைந்த வாழ்க்கையில் அளவற்ற மகிழ்ச்சியைக் காணட்டும்.” என்று கூறியுள்ளார்.
திருமண வாழ்த்துச் செய்தியில், மறைந்த தலைவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரது ஆசியுடன் குடும்ப விழா நடைபெறும் என்று சோனியா காந்தி கூறியிருப்பது, முன்னாள் முதல்வர் கலைஞரின் மீதான தனிப்பட்ட மரியாதையையும் அரசியல் உறவின் வரலாற்றையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.









