திருப்பரங்குன்றம் வழக்கு: அரசின் நிலைப்பாடு என்ன?

By Kavi

|

Published on 21 Nov 2026, 4:49 PM

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசித்து வருவதாக சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சர்ச்சைக்குரிய தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு நவம்பர் 20, 2026 அன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

ADVERTISEMENT

 வரும் நவம்பர் 24, 2026 கார்த்திகை தீபத் திருநாளன்று மட்டும் சம்பந்தப்பட்ட தூணில் விளக்கேற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2025 டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை வித்துள்ளது. 

இந்த விஷயத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மதுரையில்  செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

ADVERTISEMENT

இதற்கு அவர்,  ”உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்; இன்று மாலை, அல்லது நாளைக்குள் உரிய முடிவு எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.

அதுபோன்று, கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜேஷ் குமார், ”தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்” என்று கூறினார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel