கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டி? துரைமுருகன் பதில்!

By Kavi

|

Published on 21 Nov 2026, 4:06 PM

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். 

2026 சட்டமன்ற தேர்தலில் தனது கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தோல்வியுற்றார். 

ADVERTISEMENT

அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றி கழக வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்றார். 

உடல்நல குறைவு காரணமாக 70 நாட்களுக்கும் மேலாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அந்த அவர் நேற்று முன்தினம் காலமானார்.

ADVERTISEMENT

இதனால் கொளத்தூர் தொகுதி காலியாகியுள்ளது. இதோடு சேர்த்து தமிழகத்தில் மொத்தம் ஆறு தொகுதிகள் காலியாக உள்ளன. 

இதற்கு விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

அதுபோன்று, கொளத்தூர் தொகுதியில் மீண்டும் ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்திருக்கிறார். 

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், “நாங்கள் உள்ளே இதைப் பற்றி எல்லாம் பேசவில்லை. சும்மா டிவி தான் பார்த்துக் கொண்டிருந்தோம். 

இது ஆலோசனை செய்கிற கூட்டமே இல்லை. நான் இருந்தேன். ஸ்டாலின் இருந்தாரு. பொன்முடி இருந்தாரு. 

மற்றவர்கள் எல்லாம் இல்லை. பொருளாளர் இல்லை. இதை பேசுவதனால் எல்லோரையும் வைத்து தான் பேசுவோம்” என்று பதிலளித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel