8-வது ஊதியக் குழுவில் உங்க சம்பளம் எவ்வளவு ஏறும்?

By Minnambalam Desk

|

Published on 21 Nov 2026, 9:12 AM

மத்திய அரசு ஊழியர்கள் ஆவலோடு காத்திருக்கும் 8-வது ஊதியக் குழுவில் சம்பளம் எவ்வளவு உயரும் என்ற பேச்சு சூடுபிடித்துள்ளது.

2.1, 2.28, 2.57 ஆகிய மூன்று ஃபிட்மென்ட் காரணிகளை வைத்துப் போடப்பட்ட கணக்குகள் இப்போது அதிகக் கவனம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

முக்கியக் குறிப்பு: இவை இறுதி அறிவிப்புகள் இல்லை, கணக்கீட்டு மதிப்பீடுகள் மட்டுமே. ஆனாலும் வெவ்வேறு ஊதிய நிலைகளில் இருப்பவர்களுக்கு என்ன மாற்றம் வரலாம் என்று புரிந்துகொள்ள இவை உதவும்.

ஃபிட்மென்ட் காரணி என்றால் என்ன?

ADVERTISEMENT

இப்போதைய அடிப்படைச் சம்பளத்தை எந்த எண்ணால் பெருக்கினால் புதிய அடிப்படைச் சம்பளம் வருமோ, அந்த எண்தான் ஃபிட்மென்ட் காரணி.

எடுத்துக்காட்டாக, ஒருவரின் இப்போதைய அடிப்படைச் சம்பளம் ரூ.21,700 என்றால், 2.1 காரணியில் புதிய அடிப்படைச் சம்பளம் ரூ.45,570. 2.28 காரணியில் ரூ.49,476. 2.57 காரணியில் ரூ.55,769.

ADVERTISEMENT

லெவல் 3 முதல் 6 வரை எவ்வளவு?

7-வது ஊதியக் குழுவின்படி இப்போதைய அடிப்படைச் சம்பளத்தை வைத்து, புதிய சம்பளம் கணக்கிடப்பட்டுள்ளது:

ஊதிய நிலைதற்போதைய சம்பளம்2.1 காரணி2.28 காரணி2.57 காரணி
Level 3₹21,700₹45,570₹49,476₹55,769
Level 4₹25,500₹53,550₹58,140₹65,535
Level 5₹29,200₹61,320₹66,576₹75,044
Level 6₹35,400₹74,340₹80,712₹90,978

இவை புதிய அடிப்படைச் சம்பளத் தொகைகள். இதோடு வீட்டு வாடகைப்படி (HRA), போக்குவரத்துப்படி போன்ற மற்ற சலுகைகளும் சேரும்போது மொத்தச் சம்பளம் மாறுபடும்.

மாதச் சம்பளம் ரூ.1 லட்சத்தைத் தாண்டுமா?

X பிரிவு நகரங்களில் வசிப்பவர்களுக்கு 24 சதவீத HRA என்று வைத்துக்கொண்டு கணக்குப் போட்டால், லெவல் 6 ஊழியருக்கு 2.28 காரணியில் மொத்த மாதச் சம்பளம் சுமார் ரூ.1,00,083 வரலாம். 2.57 காரணியில் அது ரூ.1,12,813 ஆக உயரக்கூடும்.

ஆனால் இவையெல்லாம் மதிப்பீடுகள்தான். 8-வது ஊதியக் குழுவின் இறுதி ஃபிட்மென்ட் காரணி, அகவிலைப்படி, மற்ற சலுகைகள் எதுவும் இன்னும் உறுதியாகவில்லை. அரசு இறுதி அறிவிப்பை வெளியிட்ட பிறகுதான் உண்மையான சம்பள உயர்வு தெரியவரும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel