அனிருத் – காவியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

By Kavi

|

Published on 21 Nov 2026, 6:49 PM

அனிருத் காவியா தம்பதியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரியுமான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த கொண்டாட்டத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் திருமண வரவேற்பு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகப் பல்வேறு அரசியல், திரையுலக மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் சென்னை வந்துள்ளனர்.

முதல்வர் விஜய் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர், 

ADVERTISEMENT

இந்தநிலையில்  பிரதமர் மோடி, அனிருத் காவியா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கலாநிதி மற்றும் காவேரி மாறனுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில்,  ”திருமண வாழ்க்கை எனும் நீண்ட பயணத்தில் நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் அடியெடுத்து வைக்கும் காவியா மற்றும் அனிருத் ஆகியோருக்கு, எனது இதயம் கனிந்த , நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள், ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் மீதான அன்பையும் பாசத்தையும் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

2026 நவம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel