ரஷ்யா – உக்ரைன் போர்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை!

Published On:

| By Kavi

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 11 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் உக்ரைன் ராணுவத்துக்கு பீரங்கிகள் வழங்கப்போவதாக அமெரிக்காவும், ஜெர்மனியும் அறிவித்துள்ளதற்கு அமெரிக்கா அபாய கோட்டைத் தாண்டுகிறது என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களை சிறிய நாடான உக்ரைன், உலக நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளுடன் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்துக்கு பீரங்கிகள் வழங்கப்போவதாக அமெரிக்காவும், ஜெர்மனியும் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பில், உக்ரைனுக்கு 31 எம்1 அப்ராம்ஸ் ரக பீரங்கிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

ADVERTISEMENT

உக்ரைன் ராணுவம் தங்கள் எல்லையை தற்காத்துக் கொள்ளும் திறனை அதிகரிப்பதற்கு இந்த பீரங்கிகள் உதவும் என்று பைடன் கூறினார்.

இது ரஷ்யாவுக்கான அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்த அவர், ரஷ்ய ராணுவம் தங்களுக்கு சொந்தமான இடத்துக்குத் திரும்ப சென்றுவிட்டால் அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்துக்கு போர் பீரங்கிகள் வழங்க முடிவு செய்ததன் மூலம் அமெரிக்கா அபாய கோட்டைத் தாண்டுவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ ஜாங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியாவின் சக்தி வாய்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான கிம் யோ ஜாங், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா நிற்பதைப் போல, அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா நிற்கும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் இறையாண்மை மற்றும் தற்காப்பு உரிமைகள் குறித்து பேச அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு உரிமை இல்லை என்றும் கிம் யோ ஜாங் கடுமையாக சாடியுள்ளார். இது, உலக நாட்டு தலைவர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராஜ்

அடுத்தடுத்து எஸ்.ஐ களை துப்பாக்கியால் மிரட்டிய வாலிபர் : அச்சத்தில் காவல்துறை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share