முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published On:

| By Kavi

ips officers transfer

தமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ள உத்தரவில், 

ADVERTISEMENT

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் முதன்மை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக இருந்த கூடுதல் ஏடிஜிபி ஆயுஷ் மணி திவாரி  சென்னை காவல்துறை தலைமை அலுவலக கூடுதல் ஏடிஜிபியாகவும், 

திருப்பூர் காவல் ஆணையர் ராஜேந்திரன், மதுரை நகர காவல் ஆணையராகவும், 

ADVERTISEMENT

மதுரை நகர காவல் ஆணையர் கபில் குமார் சரத்கர், சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராகவும், 

சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் பர்வேஷ்குமார், கடற்படை பாதுகாப்பு குழுவுக்கும், 

ADVERTISEMENT

சென்னை, பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு ஐஜி ராஜேஸ்வரி, திருப்பூர் நகர காவல் ஆணையராகவும், 

சேலம் நகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாகவும், 

சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கார்த்திகேயன், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐஜியாகவும்

சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜி சாமுண்டீஸ்வரி, சென்னை பெருநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையராகவும், 

காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி பாபு, சென்னை பெருநகர காவல் தலைமையிட கூடுதல் ஆணையராகவும்,

சென்னை காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையர் ஜோசி நிர்மல் குமார், சேலம் நகர ஆணையராகவும், 

தமிழக காவல்துறை தலைமை அலுவலகத்தின் பணி அமைப்பு பிரிவு ஐஜி தேன்மொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராகவும், 

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ராதிகா காவல்துறை தலைமையக ஐஜி ஆகவும், 

சென்னை காவல்துறை தலைமையக நிர்வாக ஐஜி மகேஸ்வரி சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்ககத்தின், சிறப்பு புலனாய்வு பிரிவு -1 ஐஜியாகவும்,

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தின், சிறப்பு புலனாய்வு பிரிவு -1 ஐஜி துரை குமார் காவல்துறை தலைமை அலுவலக பணியமைப்பு பிரிவு ஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share