உக்ரைன் போரைப் பயன்படுத்தி ரஷ்யாவை துண்டாக்க முயற்சி செய்கிறார்கள் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தனது ராணுவப் படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்தப் போர் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், இரு நாட்டுப் படைகளும் சளைக்காமல் போரிட்டு வருகின்றன.
அதே நேரம் இந்தப் போரில் இருதரப்பிலும் பெரிய அளவில் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, ரஷ்ய அதிபர் புதின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர்,
“உக்ரைன் மீதான போர் நடவடிக்கை கடினமானது. ஆனால், தேவையான முடிவு. அமைதியை ஏற்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் பொய் சொல்லி வருகின்றன.
உக்ரைன் போரைப் பயன்படுத்தி ரஷ்யாவைத் துண்டாக்க முயற்சிகள் செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் உக்ரைன் போர் குறித்து பேசியுள்ள அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், “ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் இந்த ஆண்டு முடிவுக்கு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
-ராஜ்
“தமிழ்நாட்டின் கடனை குறைக்க முடியாது” – ஜெ.ஜெயரஞ்சன் அதிரடி பேட்டி!
டிசம்பரில் தமிழகம் தந்த ஜிஎஸ்டி எவ்வளவு தெரியுமா?
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!