மனதின் குரல் நிகழ்ச்சி!
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 29) காலை 11 மணிக்கு நாட்டு மக்களுடன் கலந்துரையாடுகிறார்.
மருத்துவ அறிவியல் மாநாடு!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மருத்துவ அறிவியல் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
அன்புமணி கலந்துரையாடல்!
தர்மபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கலந்துரையாடுகிறார்.
தைப்பூச திருவிழா!
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேட்பாளர் அறிவிப்பு!
நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சமூக நீதி பாதுகாப்பு பொதுக்கூட்டம்!
பழனி பாபாவும் சமூக நீதியும் என்ற தலைப்பில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இன்று ஆயக்குடியில் பொதுக்கூட்டம் நடத்துகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 253-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா நியூசிலாந்து மோதல்!
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 49 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!