செந்தில் பாலாஜி இல்லத்திற்கு ஆர்.எஸ்.பாரதி வருகை!

Published On:

| By Selvam

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் அங்கு சென்றுள்ளனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கு தொடர்பாக இன்று (ஜூன் 13) காலை முதல் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையோடு அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தலைமை செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வரும் செந்தில் பாலாஜியின் இல்லத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்ட திமுகவினர் வந்தனர்.

ADVERTISEMENT

அப்போது அமைச்சரின் இல்லத்திற்கு வெளியே இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுகவினரை தடுத்து நிறுத்தினர். இதனால் அமைச்சரின் இல்லத்திற்கு வெளியே அவர்கள் காத்திருக்கின்றனர்.

செல்வம்

ADVERTISEMENT

அண்ணாமலைக்கு எதிரான தீர்மானத்தில் உள்நோக்கம்: நாராயணன் திருப்பதி

விரைவில் பால் கொள்முதல் அதிகரிப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share