ஜி.ஹெச்.சில் மனைவி இட்லி ஊட்டிவிட, மந்திரியிடம் டிமாண்ட் வைத்த  ரவுடி:  பாஜக கொடுக்கும் தைரியமா?

அரசியல்

சென்னையை அடுத்த தாம்பரத்துக்கு அருகே இருக்கும் நெடுங்குன்றத்தைச் சேர்ந்த பிரபலமான ரவுடி சூர்யா மீது, கொலை மற்றும்  கொலை முயற்சி உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.  இவர் எதிரிகளைக் கொடூரமாகக் கொலை செய்யக் கூடியவர்.  2018இல் ஒரு கொலை செய்துவிட்டு அருகிலிருந்த சிசி கேமரா முன்பு  நின்று போஸ் கொடுத்துவிட்டு போலீஸுக்கு  சவால் விட்டு வந்தவர்.  அப்போதிருந்த காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் அதிமனி, ரவுடி சூர்யாவைப் பிடித்து கை கால் உடைக்கப்பட்ட அடையாளம் இன்னும் மறையாமல் உள்ளது.

2022 ஜூன் 27இல் மதி என்ற மதிவாணனை கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்று அரசியல் செல்வாக்கை வைத்து வெளியில் வந்துவிட்டார் சூர்யா.  கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததால்…  2022 ஜூலை 27ஆம் தேதி பெருங்களத்தூர் பகுதியில் சூர்யா வந்த காரை  தாம்பரம் காவல் துறை ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் அடிப்படையில் மடக்கி அவரை மீண்டும் கைது செய்தனர் போலீஸார்.  கைது செய்து புழல் சிறையில் வைக்கப்பட்டு சில காரணங்களுக்காகக் கடலூர் மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டார்.

சூர்யாவுக்கு ஹார்ட் அட்டாக்

சிறையிலிருந்த ரவுடி சூர்யாவுக்கு மன அழுத்தமும் ரத்த அழுத்தம் ஏற்பட்டு நெஞ்சு வலியால் துடித்தவரை, நேற்று ஆகஸ்ட் 4ஆம் தேதி மதியம் 12.00 மணியளவில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர் சிறை நிர்வாகத்தினர். 33 வயதான ரவுடி சூர்யாவுக்கு இதுவே முதல் அட்டாக்.  அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உரிய நேரத்தில் மருந்து செலுத்தி  உயிரைக் காப்பாற்றியுள்ளார்கள். 

மருத்துவமனையா மனமகிழ் மன்றமா?

நேற்று இரவு வழக்கறிஞர் ஒருவர் வேகமாக சூர்யா இருந்த  வார்டுக்கு வந்தவர் தனது செல்போன் மூலமாக போன்போட்டு ரவுடி சூர்யா காதில் வைத்தார்.  எதிர்முனையில் இருந்தவரிடம் சில தகவல்களைச் சொல்லி அசைன்மெண்ட் கொடுத்துள்ளார் சூர்யா. இதற்கிடையே…  மதுரை பாஜக கூட்டத்திற்குச் சென்றிருந்த சூர்யாவின் மனைவி விஜயலட்சுமிக்கு தகவல் தெரிந்ததும் மகள் யுவஸ்ரீ, சதன்ராஜ் மற்றும் ஹரிஹரன் உடன் நேற்று இரவே கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார்கள்.  இரவு கணவர் சூர்யாவுடன் இருந்தவர், இன்று ஆகஸ்ட் 5ஆம் தேதி, காலையில் சூர்யாவுக்கு இட்லி ஊட்டி விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்.

அதேபோல் சென்னை நெடுங்குன்றம் பகுதியிலிருந்து சிவபரத், தரணி, ஆதவன் மூவரும் பணம் எடுத்து வந்தார்கள்.  இன்னொரு டீம் செல்வக்குமார், சதீஷ், கீர்த்தனா மூவரும் சென்னையிலிருந்து வந்தார்கள்.  இதுபோன்று ரவுடி சூர்யாவைப் பார்க்க ஏகப்பட்ட  பேர்  வருகைத் தந்தபடியே இருக்கிறார்கள்.  பாதுகாப்புக்கு இருந்த போலீஸாரை மீறி வருகிறார்களா, அல்லது போலீசின் அனுமதி பெற்றே வருகிறார்களா என்று  மருத்துவமனை ஊழியர்களே பேசிக் கொண்டார்கள்.  

அள்ளிச் சென்ற இன்ஸ்பெக்டர்

கொஞ்ச நேரத்தில் கடலூர் புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் குருமூர்த்திக்குத் தகவல்கள் தெரிந்ததும் தனது டீமுடன் கடலூர் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தார்.  ரவுடி சூர்யாவை பார்க்க வந்த  அனைவரையும் அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றவர், ஒவ்வொருவராக அனைவரையும் விசாரித்தார்.  அப்போதுதான் தெரிந்தது வந்தவர்களில் பலர் மீதும் கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளது என்று.  

சூர்யா தம்பி உதயாவை கொலை செய்தவர்களைப் பழிக்குப் பழி வாங்க திட்டமிட்ட நேரத்தில் சூர்யா இன்னொரு கொலை வழக்கில் சிறையில் இருந்தார். அதனால்  வெளியிலிருந்த சூர்யா மனைவி விஜயலட்சுமிதான் ஸ்கெட்ச் போட்டு 2018இல் ஆட்களை வைத்து எதிரியை கொலை செய்துள்ளார்.  மேலும் பல கொலை முயற்சி வழக்குகளும் இவர் மீது உள்ளது தெரியவந்ததும், அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்களா, வாரன்ட்டுகள் உள்ளதா என விசாரித்து, அனுமதி இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் வரக்கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டு, அனைவரின் கை ரேகைகளையும் பதிவு செய்துகொண்டு அனுப்பி வைத்துள்ளார் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி. 

அமைச்சருக்கு போன் போடும்மா

மீண்டும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சூர்யாவைப் பார்க்கச் சென்ற மனைவி விஜயலட்சுமியிடம் அமைச்சருக்கு போன் போட்டு சொல்லும்மா என்று கூறியிருக்கிறார் சூர்யா.  நான் வெளியில் போய்விட்டு பேசிட்டு வருகிறேன் என்று வெளியில் சென்ற விஜயலட்சுமி   யாரிடமோ பேசிட்டு வந்தார். ரவுடி சூர்யாவுக்கு ஆஞ்சியோ செய்ய வேண்டியதிருப்பதால்  அரசியல்வாதிகளிடம் பேசி தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறார் விஜயலட்சுமி.

”பயங்கரமான கொலைக் குற்றவாளி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும்போது, செல்போன் அனுமதிப்பது, மனைவி உட்கார்ந்து கொண்டு சாப்பாடு ஊட்டிவிடுவது, பாதுகாப்பற்றது என்பது பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரியாதா? அல்லது அரசியல் அதிகாரத்தால் சிறப்புச் சலுகைகளுக்கு அனுமதிக்கப்படுகிறதா எனப் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது” என்கிறார்கள் ஐசியூ வார்டில் உள்ள மற்ற நோயாளிகள்.

பாஜக பின்புலம்

விஜயலட்சுமி நெடுங்குன்றம் ஊராட்சியில் 9வது வார்டில் போட்டியின்றி வெற்றிபெற்று, துணைத் தலைவர் பதவியையும் போட்டியின்றி பெற்று தற்போது பாஜகவில் செயல்பட்டு வருகிறார்.  சூர்யாவை போலீஸார் தீவிரமாக தேடிப்போய் கைது செய்யும் நேரத்தில் செங்கல்பட்டில் இருந்து  ஒரு பாஜக விஐபியின்  காரில் ஏறித் தப்பித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

சட்டம் ஒழுங்கு இல்லை என ஒருபக்கம்  ஆர்ப்பரிக்கிறார் அண்ணாமலை. இன்னொரு பக்கம் பாஜகவின் அரசியல் ஆசீர்வாதம் ரவுடிக்கு மருத்துவமனையில் சகல சௌகரியங்களையும் செய்துகொடுக்கிறது. பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு! 

வணங்காமுடி

தமிழகம் முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை!

+1
0
+1
6
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

3 thoughts on “ஜி.ஹெச்.சில் மனைவி இட்லி ஊட்டிவிட, மந்திரியிடம் டிமாண்ட் வைத்த  ரவுடி:  பாஜக கொடுக்கும் தைரியமா?

  1. A darknet market is a type of online marketplace that operates via darknets such as Tor or I2P. biggest darknet market list on darkcatalog.com These shops give a place for selling and buying both legal and illegal items.

Leave a Reply

Your email address will not be published.