முடிந்தால் தன்னை கைது செய்து பார்க்குமாறும், பாஜக தொண்டர்கள் மீது வேண்டாமென்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஆகஸ்டு 4) அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எச்சரிக்கையாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஆகஸ்டு 4) செய்தியாளர்களை சந்தித்தார். நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பதிலளித்திருந்தார். இதுகுறித்துதான் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் விரிவாக பேசினார்.
“நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடைய அறிக்கை முன்னுக்கு பின் முரணாக உள்ளது.5 சதவீத ஜிஎஸ்டியை நாங்கள் ஏற்றவில்லை, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தான் ஏற்றியது. மாநிலத்தின் நிதி அமைச்சரும் அந்த கூட்டத்தில் தான் அங்கம் வகித்தார். தமிழகத்தின் மொத்த ஜிஎஸ்டி நிலுவைத்தொகை பூஜ்ஜியமாக உள்ளது. பாஜக அரசு 5 சதவிகிதம் தான் ஜிஎஸ்டி ஏற்றினார்கள். திமுக அரசு, அதனை சாக்காக வைத்து 20 சதவிகிதம் விலை ஏற்றியிருக்கிறார்கள். தயிர் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக விலை உயர்ந்திருக்கிறது. இதனைப் பார்க்கும் போது கிராமத்தில் அடிக்கடி கூறும் சொலவடை தான் நினைவுக்கு வருகிறது. ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்று சொல்வானாம். சரியாக அரசை நிர்வகிக்க தெரியாதவர்கள் இது போன்று தான் கூறுவார்கள்” என்றார்.
நிர்மலா பேசும்போது வெளிநடப்பா?
தொடர்ந்து பேசிய அவர், “திமுக அரசு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஏன் 100 ரூபாய் குறைக்கவில்லை? பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருக்கும் போது, தமிழக எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.இதற்காக அவர்கள், தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். 5 ஜி அலைக்கற்றை 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஏலம் போயிருக்கிறது. இதுதான் இந்தியாவில் நடைபெற்ற அதிகப்படியான ஏலத்தொகையாகும். 2 ஜி ஊழலை ஆ.ராசா மறைக்கப்பார்க்கிறார்.5 ஜி ஏலம் நாட்டிற்கு லாபம் தான்.மத அரசியல் நாங்கள் செய்யவில்லை. கனல் கண்ணன் பெரியார் சிலை குறித்து பேசியது தவறு என்றால், திமுகவினர் கடவுளை அவமானப்படுத்தி பேசுவது மிகப்பெரிய பாவம்” என்றார் செந்தில்பாலாஜி.
மின் கட்டணம் குறித்து பாஜகவினர் சமூக வலைதளத்தில் தவறாக கருத்து பதிவிடுவதாகவும், அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,
“நான் தான் முதலில் கூறினேன். செந்தில் பாலாஜிக்கு தைரியம் இருந்தால் முதலில் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். தமிழ்நாட்டின் கடன் 6 லட்சம் கோடியை கடந்து விட்டது. இனியும் திமுக தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது.” என்றார்.
Comments are closed.