சன்னரக அரிசி எனும் பெயரில் ரேஷன் அரிசியை ரூ.30-க்கு விற்பனை செய்வதா? விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்

Published On:

| By Pandeeswari Gurusamy

rice

தவெக அரசு சன்னரக அரசி என்ற பெயரில் இலவச அரிசியை ரூ.30க்கு நூதனமான முறையில் மக்களை ஏமாற்றி விற்பனை செய்து வருவதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,”தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமுதம் கூட்டுறவுக் கடைகள் மூலம் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதால், அதன் விற்பனை மந்தமடைந்து, அரிசி மூட்டைகள் அதிகளவில் தேக்கமடைந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

அதிலும், தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள நியாயவிலைக் கடை ஒன்றில், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் தொடங்கி வைத்த சன்னரக அரிசி விற்பனையில், ரேஷன் அரிசியையே கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியதோடு, அதனைத் திருப்பி ஒப்படைத்த அவல நிகழ்வும் அரங்கேறியுள்ளது.

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமுதம் கூட்டுறவுக் கடைகளில் சன்னரக அரிசியைக் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யும் திட்டத்தின் தொடக்க நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்திய அமைச்சர்கள், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அரிசியின் தரத்தைப் பரிசோதித்தார்களா? அல்லது தங்களது Reels கண்டென்ட்காக சன்னரக அரிசி வழங்குவதாகக் காட்டிவிட்டு, இலவச ரேஷன் அரிசியைப் பாலிஷ் செய்து, சன்னரக அரிசி என மக்களுக்கு முறைகேடாக விற்பனை செய்து ஏமாற்ற முயல்கின்றனரா? என்ற கேள்வி எழுகிறது.

ADVERTISEMENT

எனவே, சன்னரக அரிசி என்ற பெயரில் தரமற்ற அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தரமான சன்னரக அரிசியைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share