அனைத்துக் கட்சி கூட்டம் : தவெக, திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் புறக்கணிப்பு!

Published On:

| By Kavi

தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்று வரும் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக வெற்றி கழகம் உட்பட ஒன்பது கட்சிகள் புறக்கணித்துள்ளன. 

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராகவும் இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகின்றன. 

ADVERTISEMENT

இந்த நிலையில் தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி, சிறப்பு முகாம்கள் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்திருந்தார். 

அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூடியது. 

ADVERTISEMENT

இந்த கூட்டத்தை தமிழக வெற்றிக்கழகம், திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, ஆம் ஆத்மி, தேமுதிக உள்ளிட்ட ஒன்பது கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

பாஜக, அதிமுக, தேசிய மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே பங்கேற்று உள்ளன. 

ADVERTISEMENT

தமிழகத்தில் 74 லட்சம் பேர் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளால் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எஸ் ஐ ஆர் நடைமுறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி இவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share