தமிழகம் முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை!

தமிழகம்

தமிழகம் முழுவதும் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் தனியார் நிதி நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

வேலூரை தலைமையிடமாக கொண்டு இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் என அழைக்கப்படும் ஐ.எப்.எஸ் தனியார் நிதி நிறுவனத்தை வேத நாராயணன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகிய இரு சகோதரர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.8000 தருவதாக கூறி ஆயிரக்கணக்கானோரிடம் பணம் பெற்று பலகோடி மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இந்நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம் வேலூர், அரக்கோணம், நெமிலி ஆகிய 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி!

முன்னதாக ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி ஆருத்ரா நிதி நிறுவனம் பல கோடி மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மே மாதம் 24ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அதில் கணக்கில் காட்டப்படாத 3.41 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 81 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா பெயரில் செயல்பட்டு வரும் 5 நிறுவனங்கள் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சோதனையால் கலக்கத்தில் முதலீட்டாளர்கள்!

அதன் தொடர்ச்சியாக தற்போது ஐ.எப்.எஸ் நிறுவனத்தின் மீது மோசடி புகார் எழுந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜுவால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு பரிந்துரைத்தார்.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஐ.எப்.எஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 21 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், நிறுவனத்தில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

சமூகச் சந்தைப் பொருளாதாரத்தில் இருந்து ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு… பகுதி 6

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.