பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கில் ஆர்சிபி மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலேவை பெங்களூரு போலீஸ் இன்று (ஜூன் 6) கைது செய்தனர்.
கடந்த ஜூன் 4-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. RCB marketing head arrested
இதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், 11 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பெங்களூரு போலீசார், ஆர்சிபி அணி நிர்வாகம், கர்நாடகா கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தயானந்தா, கூடுதல் ஆணையர் விகாஷ் குமார், மத்திய மண்டல துணை ஆணையர் சேகர் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஆர்சிபி மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலேவை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து போலீசார் இன்று (ஜூன் 6) கைது செய்தனர். அதேபோல, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கிரண், சுமந்த் மற்றும் சுனில் மேத்யூ ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம், கப்பன் பார்க் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.