ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று பெங்களூரு வந்தடைந்த ஆர்சிபி வீரர்களுக்கு ரசிகர்கள் இன்று (ஜூன் 4) உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஐபிஎல் சீசன் தொடரின் இறுதிப்போட்டி, நேற்று (ஜூன் 3) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 18 ஆண்டு கால காத்திருப்புக்கு பின், பெங்களூரு அணி வெற்றி பெற்றதால் கர்நாடகா மாநில மக்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். நேற்று இரவு முழுவதும் வாண வேடிக்கை நிகழ்த்தி தீபாவளி பண்டிகையைப் போல கொண்டாடினர்.

இந்தநிலையில், வெற்றிக்கோப்பையுடன் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த வீரர்களை கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அங்கிருந்து தாஜ் ஓட்டலுக்கு பேருந்தில் சென்ற ஆர்சிபி வீரர்களுக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து இன்று மாலை கர்நாடகா மாநில சட்டமன்ற வளாகத்தில் ஆர்சிபி வீரர்களை அம்மாநில ஆளுநர் தவார் சந்த் கெக்லாட், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் கெளரவிக்க உள்ளனர். இதனை தொடர்ந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. ஆர்சிபி வெற்றியால் பெங்களூரு நகரமே களைகட்டியுள்ளது. rcb fans victory parade in bangalore