பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. புத்தகத்தின் முதல் பிரதியை ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் திமுகவின் சீனியர் நிர்வாகிகளை ஸ்டாலின் டீல் செய்யும் விதம் குறித்து ரஜினிகாந்த் பேசியது அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த் பேசும்போது, “ஏவி விட்டால் தான் எல்லோரும் வேலை செய்கிறார்கள். ஆனால், ஏவி விடாமல் வேலை செய்பவர் எ.வ.வேலு என்று கலைஞரே வாழ்த்தியிருக்கிறார்.
உலகத்தின் எந்தவொரு தலைவரையும் இப்படி கொண்டாடியிருக்க முடியாது, அந்தளவிற்கு கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடியிருக்கிறீர்கள். கலைஞர் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு அந்தளவிற்கு மரியாதை.
ஸ்டாலின் முதல்வரான பிறகு அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றது என்பது அவரது ஆளுமை, உழைப்பு, அரசியல் ஞானத்திற்கு சான்றாகும்.
எப்போதுமே ஸ்கூல் டீச்சர் புதிய மாணவர்களை எளிதில் சமாளித்துவிடுவார். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் கிடையாது.
இங்கே ஏகப்பட்ட பழைய ஸ்டூடண்ட்ஸ் இருக்கிறார்கள். அதுவும் சாதாரணமான பழைய ஸ்டூடண்ட்ஸ் கிடையாது, அனைவருமே அசாத்தியமானவர்கள். அனைவரும் ரேங்க் வாங்கிவிட்டு கிளாஸை விட்டு போக மாட்டோம் என்று உட்கார்ந்திருக்கிறார்கள்.
துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அவரிடம் ஏதாவது சொன்னால், ‘அப்படியா சந்தோஷம்’ என்பார். நன்றாக இருக்கிறது என்பதற்காக சந்தோஷம் என்கிறாரா அல்லது நன்றாக இல்லை என்பதற்காக சொல்கிறாரா என்று ஒன்றுமே புரியாது. இவர்களை டீல் செய்யும் ஸ்டாலின் சார், ஹேட்ஸ் ஆஃப் டூ யூ” என்றார். ரஜினி அவரது ஸ்டைலில் துரைமுருகனை கலாய்த்து பேசும்போது அனைவரும் கைத்தட்டி சிரித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை எழுதியது ஏன்? – அமைச்சர் வேலு சொன்ன காரணம்!
சிப்பிக்குள் முத்து… அமைச்சர் வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்