ராகுலுக்கே தலைமையேற்கும் தகுதி: குலாமுக்கு கார்கே பதில்!

By Kalai

|

Published on 27 Aug 2022, 4:19 PM

ராகுல்காந்தி அரசியல் முதிர்ச்சியற்றவர் என்று கூறி  மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகிய நிலையில், ராகுல்காந்தி ஒருவருக்கே தலைமையேற்கும் தகுதி உள்ளது என்று அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

ராகுல் மீது புகார்

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத் நேற்று (ஆகஸ்ட் 26) கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகினார்.

“காங்கிரஸ் கட்சி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ராகுல்காந்தியின் முதிர்ச்சியற்ற தன்மையும், விளையாட்டுத்தனமான போக்குமே இதற்கு காரணம்” என்று குற்றம் சாட்டி இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

ADVERTISEMENT

வலுவான தலைமை தேவை

இதனை காங்கிரசின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஆமோதித்தனர்.

ADVERTISEMENT

காங்கிரசின் தலைமை பொறுப்புக்கு நூல்பாவை போன்று இல்லாமல் சுயமாக சிந்திக்கும் ஒருவரை நியமித்தால் தான் கட்சியை வலுப்படுத்த முடியும் என்று விமர்சித்தனர்.

காங்கிரசை காப்பாற்றும் நடவடிக்கையில் தான் சோனியாகாந்தி தற்போது இறங்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

நாடறிந்த முகம் ராகுல்

இந்த நிலையில் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்திக்கு ஆதரவாகக் பேசியுள்ளார்.

இன்று (ஆகஸ்டு 27) ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய கார்கே, “ ஒரு மிகப்பெரிய கட்சியின் தலைவராக இருப்பவர் நாடறிந்த முகமாக இருக்கவேண்டும்.

கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்த வேண்டியவருக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, மேற்கு வங்கம் முதல் குஜராத் வரை ஆதரவு இருக்க வேண்டும்.

அப்படி ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றவர் காங்கிரசில் ராகுல் காந்தியைத் தவிர வேறு இல்லை” என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

தலைமையேற்க வலியுறுத்துவோம்

மேலும் அவர், “எனவே, கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க ராகுல் காந்தியை வலியுறுத்தவுள்ளோம்.

கட்சிக்காகவும், நாட்டிற்காகவும் ஆர்எஸ்எஸ்-பாஜகவை எதிர்த்து போராடி நாட்டை ஒற்றுமையுடன் வைத்திருக்க ராகுல் காந்தியால் தான் முடியும்.

நாட்டு மக்களுக்காக அவர் இதை செய்ய வேண்டும். கட்சிக்கு தலைமையேற்க ராகுல் மறுத்தால் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.

அவருக்கு ஆதரவாக கட்சியில் பலர் இருக்கிறோம் என்பதை தெரிவிப்போம்” என்று மல்லிகார்ஜூன கார்கே கூறியிருக்கிறார்.

கலை.ரா

குலாம் நபி ஆசாத் விலகியது தற்செயலானதா?

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kalai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel