கதறி அழும் அமேசான் ஊழியர்கள்: காரணம் இது தான்!

Published On:

| By Selvam

இந்தியாவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணி நீக்க நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக ஊழியர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, அமேசான் ஊழியர் ஒருவர் Grapevine என்ற செயலில் அமேசான் நிறுவனம் குறித்து எழுதிய பதிவு தற்போது முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது.

https://twitter.com/anonCorpChatInd/status/1613832703014768640?s=20&t=m2EYIMIr9pQr28–IJTAcw

அதில் அவர், “எனது குழுவில் உள்ள 75 சதவிகித பணியாளர்கள் சென்றுவிட்டனர். மீதமுள்ள 25 சதவிகித பணியாளர்களில் நானும் வேலை செய்கிறேன். எனக்கு வேலை செய்ய உத்வேகம் இல்லை. அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குகிறார்கள்.இதனால் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் அழுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனம் இந்த மாதம் 18 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவிப்பை வெளியிட்டது. இதனால் அமேசான் நிறுவனத்தின் இ-காமர்ஸ் மற்றும் மனித வளம் பெரிதும் பாதிக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 1 லட்சம் ஊழியர்கள் வேலை செய்யும் அமேசான் நிறுவனத்தில் 1,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இருப்பினும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஐந்து மாத பணிநீக்க ஊதியத்தை அமேசான் நிறுவனம் வழங்குவதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் அமேசான் நிறுவனத்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இது வால்மார்ட் இன்க் நிறுவனத்திற்குப் பிறகு அமெரிக்காவின் இரண்டாவது பெரிய தனியார் நிறுவனமாகும். பணவீக்கம் அதிகரித்து வருவதால் அமேசானின் பங்கு கடந்த ஆண்டு பாதியாகக் குறைந்தது. இதனால் கடந்த நவம்பர் மாதம் அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களில் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது.

அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களில் 11 ஆயிரம் பேரை இதுவரை பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பிரிட்டனின் புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது: ரஷ்யா உறுதி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share