எம்ஜிஆர் பிறந்தநாள்!
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி, இன்று (ஜனவரி 17) அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார்.
காணும் பொங்கல்!
இன்று காணும் பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
போக்குவரத்து மாற்றம்!
சென்னையில் இன்று காணும் பொங்கலை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை வழியாக அண்ணா சாலை செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
வண்டலூர் பூங்கா!
பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்.
சி டெட் தேர்வு!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சி-டெட் தோ்வு இன்று நடைபெறுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகம், புதுச்சேரியில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பேட்மிண்டன் போட்டி!
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரொனா பாதிப்பினால் மருத்துவமனையில் 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் : எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கடிதம்!
”சூப்பர்ஸ்டாரை விட பெரிய பட்டம் சுப்ரீம் ஸ்டார் தான்” – சரத்குமார் ஆவேசம்