சென்னையில் நேற்று (அக்டோபர் 20-ந் தேதி) இரவு முதல் இன்று (அக்டோபர் 21-ந் தேதி) காலை வரை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் 9 இடங்களில் 10 செ.மீ.க்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக எம்.ஜி.ஆர். நகரில் 15.14 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலை வரை மழை நீடித்தது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவாகி உள்ள மழைப் பதிவு விவரம்:
அதன்படி, சென்னையில் 9 இடங்களில் 10 செ.மீ.க்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் 15.14 செ.மீ., சைதாப்பேட்டையில் 12.96 செ.மீ., ஆலந்தூரில் 12.89 செ.மீ., டிஜிபி அலுவலகப் பகுதியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும் மடிப்பாக்கத்தில் 11.94 செ.மீ., மதுரவாயலில் 11.58 செ.மீ., வளசரவாக்கத்தில் 11.5 செ.மீ., நெற்குன்றத்தில் 11.32 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 11.22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதேபோல கொரட்டூரில் 9.88 செ.மீ., வளசரவாக்கத்தின் மற்றொரு பகுதியில் 9.64 செ.மீ., சாலிகிராமத்தில் 9.46 செ.மீ., அம்பத்தூரில் 9.3 செ.மீ., பாரிமுனையில் 8.76 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகத்தில் 8.65 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மணலியில் அதிகபட்சமாக 8.62 செ.மீ., அண்ணா நகர் மேற்கில் 8.52 செ.மீ., பள்ளிக்கரணையில் அதிகபட்சமாக 8.06 செ.மீ., மணலி நியூ டவுனில் 7.9 செ.மீ., சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 7.58 செ.மீ., புழலில் 7.26 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கத்திவாக்கத்தில் 6.87 செ.மீ., ஐஸ் ஹவுஸ் பகுதியில் 6.75 செ.மீ., ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 6.46 செ.மீ., முகலிவாக்கத்தில் 6.32 செ.மீ., நாராயணபுரம் ஏரி பகுதியில் 6.16 செ.மீ., கொளத்தூரில் 5.92 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கண்ணகி நகரில் 5.8 செ.மீ., பெருங்குடியில் 5.5 செ.மீ., மேடவாக்கத்தில் 5.46 செ.மீ., மேடவாக்கம் சந்திப்பில் 5.44 செ.மீ., உத்தண்டியில் 5.22 செ.மீ., அயனாவரத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலாங்கரையில் 4.9 செ.மீ., ஈஞ்சம்பாக்கத்தில் 4.82 செ.மீ., சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் 4.8 செ.மீ., காசிமேட்டில் 4.6 செ.மீ., பெரம்பூரில் 4.45 செ.மீ., எண்ணூரில் 3.84 செ.மீ., தண்டையார்பேட்டையில் 3.08 செ.மீ., விம்கோ நகரில் 2.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வேளச்சேரியில் 0.84 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

