தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
பாபநாசம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

நமது சர்வே முடிவுபடி,
பாபநாசம்.. மூப்பனார் தொகுதி.. தமாகா தலைவர் ஜிகே வாசனின் தந்தை ஜிகே மூப்பனார் 1989-ல் ஜெயிச்ச தொகுதி.
1957-ல் இருந்து 2001 வரைக்கும் காங்கிரஸ், தமாகா என காங்கிரஸ் மட்டுமே ஜெயிச்ச தொகுதி.
2006-ல் இருந்து இந்த அத்தியாயம் மாறியது. 2006, 2011, 2016-ல் அதிமுகவின் துரைக்கண்ணு தொடர்ச்சியாக ஜெயிச்சார்.
2021-ல் போன தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜவாஹிருல்லா திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக கொடுத்திருக்கிறது.
இங்கே முஸ்லிம் லீக் வேட்பாளராக ஆடுதுறை ஷாஜஹானும் அதிமுக வேட்பாளராக சண்முக பிரபுவும் களம் காண்கிறாங்க..
திமுக – 40%
அதிமுக –33 %
தவெக- 16%
நாதக- 10% வாக்குகள் பெறும்
திமுக கூட்டணியில் ஐயுஎம்எல் முன்னிலை வகிக்கிறது
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
